’நீ என்ன சாதி..?’ விரக்தியில் நிருபரை வெறுப்பேற்றிய கிருஷ்ணசாமி..!

By Thiraviaraj RMFirst Published May 28, 2019, 3:59 PM IST
Highlights

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார், 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 
 

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார், 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

 

தேர்தக்ல் முடிவுகள் வெளியான பிறகு இன்று செய்தியாளர்களை கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். அப்போது நியூஸ் 18 செய்தி சேனல் நிருபரிடம், “நீ என்ன சாதி..?” என்று கேட்டுள்ளார் கிருஷ்ணசாமி. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 2019 மக்களவை தேர்தலில், அதிமுக-வுடன் கூட்டணி வைத்தது புதிய தமிழகம் கட்சி. கூட்டணியில் அந்தக் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி, தென்காசி தனித் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. 

அவருக்கு எதிராக திமுக சார்பில், தனுஷ் எம். குமார் களமிறக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இடையில்தான் கடும்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, தேர்தல் முடிவுகளின் போது கிருஷ்ணசாமிக்கும் தனுஷ் எம்.குமாருக்கும் போட்டி நிலவியது. இறுதியாக தனுஷ் எம்.குமார், 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணசாமியை வீழ்த்தினார். இந்தத் தேர்தலில் கிருஷ்ணசாமி, அதிமுக சின்னத்தில் போட்டியிட்டார்.

தேர்தல் தோல்விக்குப் பின்னர் இன்று ‘நன்றி தெரிவிக்கும்' செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார் கிருஷ்ணசாமி. அப்போதுதான் ஒரு பத்திரிகையாளரிடம், “நீ என்ன சாதி..?” இதனால், கொதிப்படைந்த நிருபர்கள் கோகுல், “நீங்கள் அப்படி பேசியது தவறு. எக்காரணம் கொண்டும் பத்திரிகையாளர்களிடம் சாதி பெயர் கேட்பது தவறு” என்று எதிர்ப்பு தெரிவிதார். 

click me!