
நம் குழந்தைகளுக்கான "தனி அறை" எப்படி இருக்க வேண்டும் ..?
உங்கள் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்படும் தனி அறை மற்றும் அதில் அலங்கார பொருட்களை வைப்பதில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குழந்தைகள் அதிக நேரம் செலவழிக்கும் இடம் அது. எனவே இந்த அறையில் உங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலைப் பயன்படுத்துவது முக்கியம். இருப்பினும், உங்கள் குழந்தைகள் வளர வளர அவர்களின் தேவைகள் மாறிக் கொண்டே இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், எனவே குழந்தையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் விரும்பும் வகையில் உருவாக்குவது நல்லது
நீங்கள் 10 வயதுக்குக் குறைவான குழந்தைக்கு ஒரு தனி அறையை வடிவமைக்கிறீர்கள் என்றால், அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் பாத்திரம் அல்லது கார் அல்லது ஒரு ரயில் போன்ற ஒரு கருப்பொருளை நீங்கள் எப்போதும் தேர்வு செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த கருப்பொருளும் உங்கள் குழந்தைகளின் கற்பனையை விரிவாக்க உதவ வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் அறைக்கு போதுமான இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம் உறுதி செய்வதும் முக்கியம். பகல் நேரத்தில் இயற்கையான ஒளியில் விளையாடவும் படிக்கவும் எழுதவும் முடியும். குழந்தைக்கு வளர வளர அவர்களுக்கென பிரத்யேக அறை கொடுப்பது நல்லது. அந்த அறையில் போதுமான ஜன்னல்களை வைத்திருப்பது முக்கியம். சுவர் மற்றும் விளக்குகளுக்கு நீங்கள் வெவ்வேறு வண்ணங்களை தேர்வு செய்யலாம் மற்றும் உங்கள் குழந்தைக்கு பிடித்த வண்ணத்தை கூட தேர்வு செய்யலாம். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணம் டார்க் கலர் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். சிறிய அறைகளுக்கு மைல்டு கலர்ஸ் பயன்படுத்துவது நல்லது. அப்போது தான் அறையும் சற்று பெரியதாக காணப்படும். பச்சை சிகப்பு ப்ளூ டார்க் நிறம் என்பதால் ஒரே ஒரு பக்க சுவரில் மட்டும் பயன்படுத்தலாம்
குழந்தைகளுக்கான அறையில் பொருட்களை வைக்க போதுமான சேமிப்பு இடம் இருக்க வேண்டும். அவை அனைத்தும் குழந்தைகளுக்கு மிக எளிதாக எடுக்கக்கூடிய அளவில் இருக்க வேண்டும். மேலும் பொம்மைகளை வரிசைப்படுத்தி மற்றும் ஒழுக்கமான முறையில் எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கும். அதே போன்று சற்று எட்டாத உயரத்தில் கூட ஆடைகள் மற்றும் புத்தகங்கள் வைக்க தனி சேமிப்பு அறை வைக்கலாம். சற்று உயரமான உயரத்தில் மருந்து மற்றும் பிற பொருட்களை வைத்து பூட்டு போட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.
குழந்தைகளின் வாழ்க்கையில் படிப்பு பகுதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதற்கு போதுமான திட்டமிடல் தேவை. போதுமான காற்று மற்றும் ஒளி பெரும் வகையில் அறை அமைக்க வேண்டும். லைட்டிங் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். லைட்ஸ் பொதுவாக மேற்புறத்தில் பொறுத்த வேண்டும். மங்கலான வெளிச்சத்தில் குழந்தைகளை படிக்கவோ எழுதவோ அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் அறையில் இரவு வெளிச்சத்தை வழங்குவது அவசியம்.
ஒரு சில தேய்ந்த ரப்பர் உள்ளிட்ட பழைய பொருட்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் கிட்ஸ் அறை வழங்குகிறது. உங்கள் குழந்தை வளரும்போது அவரின் வளர்ச்சியைக் கணக்கிட குரோத் சார்ட் வைக்கலாம். இது உதவும். உங்கள் குழந்தையின் உயரத்தையும் எடையும் சீரான இடைவெளியில் பதிவுசெய்ய பெரும் உதவியாக இருக்கும்