
கள்ளக்காதலியின் மகளை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று கள்ளக்காதலனே கற்பழிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குமரி மாவட்டம் சாமிதோப்பு செட்டிவிளையைச் சேர்ந்தவர் தர்மர், கட்டிட காண்டிராக்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.
தர்மருக்கும், வடக்கு தாமரைகுளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில ஆண்டுகளாக தர்மர் கள்ளக்காதலியின் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில், கள்ளக்காதலிக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் நர்சிங் படித்து விட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவரை தாயாரின் கள்ளக்காதலரான தர்மர் கற்பழிக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து கள்ளக்காதலியின் மகள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில், எங்கள் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு நான் வேலைக்கு சென்று வருகிறேன். அங்கு பணியாற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை நான் காதலித்தேன். நாங்கள் 2 பேரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்தோம்.
அந்த வாலிபருடன் நெருங்கி பழகுவதை தர்மர் கண்டித்தார். அதனை நான் பொருட்படுத்தாமல் அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்தேன். கடந்த 23-ந் தேதி அசாம் வாலிபர் என்னை சந்திக்க விரும்புவதாக கூறி அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு தர்மர் என்னை அழைத்துச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தர்மர் என்னை மிரட்டி கற்பழிக்க முயன்றார். அவரிடம் இருந்து நான் தப்பி வீட்டுக்கு வந்து விட்டேன். என்னை கற்பழிக்க முயன்ற தர்மர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, காண்டிராக்டர் தர்மர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தர்மரை தேடி போலீசார் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள். இதற்கிடையே காண்டிராக்டர் மீது புகார் கொடுத்த பெண்ணின் காதலன் அசாம் வாலிபர் திடீரென மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.