
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஏழைகள் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக, 5 ரூபாயில் உணவு வழங்கும் “அன்னபூர்ணா போஜனாலயாம்” என்ற உணவகத்தை அரசு சார்பில் மாநிலம் முழுவதும் தொடக்க ஆதித்தயநாத் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்ட பதிவில், “ உத்தரப்பிரதேசத்தில் யாரும் பசியோடு இருக்க கூடாது, எந்த ஏழையின் வயிறும் காயக்கூடாது. அதற்காக விரைவில் மாநிலம் முழுவதும் அண்ணபூர்ணா போஜனாலயம் தொடங்கப்படும். ரூ.5ல் அதிகமான சாப்பாடு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
முதல்வர் ஆதித்யநாத்தின் உத்தரவின்படி, காலை நேர உணவாக பாலில் வேகவைத்த கோதுமைகஞ்சி, டீ, ஒரு காய் இவை மூன்றும் ரூ.3 க்கு வழங்கப்படும். மதியம் மற்றும் இரவில் உணவாக அரிசிசாதம், சப்பாத்தி, பருப்பு, காய் அல்லது கீரை ஒன்று ஆகியவைசேர்த்து ரூ.5-க்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தை முதல்வர் ஆதித்யநாத் மார்ச் மாதமே அறிவித்துவிட்டநிலையில், திட்டம் முடியும் தருவாயில் இருப்பதால், விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்காகவே முதல்வர் ஆதித்தநாத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், நகரம், சிறு நகரங்கள்,கிராமங்களில் மானியம் மூலம் சமையல் கூடங்களும் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் இந்த உணவு அளிக்கப்பட உள்ளது. மாநில தொழிலாளர் நலத்துறை உருவாக்கும் இந்த சமையல்கூடங்களை, தனியார் தொண்டு நிறுவனம் பராமரிக்கும்.
குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதி, நேபாளத்தின் தேராய் பகுதி மக்கள், பிழைப்புக்காக லக்னோ நகரில் அதிகமாக முகாம் இடுவார்கள் சாலையில், தங்கி இருப்பார்கள். அவர்களின் நலனுக்காக இந்த உணவகங்கள் தொடங்கப்பட உள்ளன.
மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அம்மா உணவகம் தொடங்கி மானிய விலையில் ஏழைகளுக்கு உணவு வழங்கினார். அந்ததிட்டத்தை இப்போது ஒவ்வொரு மாநிலமும் பின்பற்றத் தொடங்கிவிட்டன. ராஜஸ்தான் மாநில அரசு அண்ணபூர்னா ரசோய் என்ற பெயரிலும் உ.பி. அரசு அண்ணபூர்ணா போஜனாலயம் என்ற பெயரில் தொடங்குகின்றன..