
ரூபாய் நோட்டு விவகாரம் :மாேடியின் மனைவி பாராட்டு!
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் பட்டேல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடைப்பெற்ற ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் பட்டேல் பங்கேற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், ஊழல் மட்டுமல்லாது கருப்புப் பணமும் ஒழிக்கப்படும். இந்த நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணமும் இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவரப்படும் என்று தொிவித்தாா்.
மேலும் நாட்டின் வளர்ச்சிக்க்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டுவருகிறது. மத்திய அரசு இதுவரை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. அதற்கு எனது பாராட்டுக்கள்" என்றும் யசோதாபென் பட்டேல் தெரிவித்தார்.
Attachments area
| Click here to Reply or Forward |