Excuse Me எனக்கூறிய 2 பெண்கள் மீது தாக்குதல்! மராத்தியில் பேசாததால் இளைஞர்கள் வெறிச்செயல்!

Published : Apr 10, 2025, 10:29 AM IST
Excuse Me எனக்கூறிய 2 பெண்கள் மீது தாக்குதல்! மராத்தியில் பேசாததால் இளைஞர்கள் வெறிச்செயல்!

சுருக்கம்

"எக்ஸ்கியூஸ் மீ" என்று கூறியதற்காகவும், மராத்தியில் பேச மறுத்ததற்காகவும் இரு பெண்கள் கும்பலால் அடித்து உதைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.   

Is it a crime to say "Excuse me"? Women were attacked for asking them to speak in Marathi: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவ்லி பகுதியை சேர்ந்த 2 பெண்கள் தாங்கள் வசித்து வந்த குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண் கைகுழந்தையுடன் இருந்தார். தங்கள் குடியிருப்பு நுழைவு வாயிலை நெருங்கியதும் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

எக்ஸ்கியூஸ்மீ என கூறிய பெண்கள் மீது தாக்குதல் 

அந்த இளைஞர் அவர்களிடம் 'இனிமேல் இங்கு மராத்தி மொழியில் மட்டும் தான் பேச வேண்டும்' என மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது அதில் ஒரு பெண், 'எங்களை மன்னித்து விடுங்கள்' என்ற அர்த்தத்தில் கூறும் வகையில் "எக்ஸ்கியூஸ்மீ"  (Excuse Me) என ஆங்கிலத்தில் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் இப்பதானே சொன்னேன் மராத்தியில் பேச வேண்டும் என்று எக்ஸ்கியூஸ்மீ என மரத்தியில் சொல்ல முடியாதா'' எனக்கூறி இரண்டு பெண்களிடமும் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். 

மனசாட்சி இல்லாமல் தாக்குதல்

இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு கூட்டம் கூடியது. அப்போது அங்கு வந்த மேலும் சில இளைஞர்கள், ''மகாரஷ்டிராவில் இருந்து கொன்டு மராத்தியில் பேசாமல் அதற்கு நியாயம் சொல்கிறாயா?'' எனக்கூறி இரண்டு பெண்களையும் திடீரென சரமாரியாக தாக்கினார்கள். பெண்ணின் கையில் குழந்தை இருந்தும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இரு பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஐஐஎம் அகமதாபாத்தின் முதல் சர்வதேச வளாகம் துபாயில் தொடக்கம்!

பெண்கள் குற்றச்சாட்டு

அந்த இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் ஒன்று சேர்ந்து இரண்டு பெண்களையும் தாக்கியுள்ளனர். 'எக்ஸ்கியூஸ்மீ' என்பது மரியாதைக்கு உச்சரிக்ககூடிய வார்த்தையாகும். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் இரண்டு பெண்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''அந்த இளைஞர்கள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டனர்'' என பெண்கள் குற்றமசாட்டியுள்ளனர்.

போலீசில் புகார் 

இந்த சம்பவம் குறித்து இரண்டு பெண்களும் விஷ்ணு நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை போலீசார் முதல் தகவல் அறிக்கை ஏதும் பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் கடந்த கால தகராறில் இருந்து எழுந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் ஆதார் செயலி: ஒரே செயலியில் அனைத்து சேவைகளும்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்
மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!