பணியில் சேர்ந்த முதல்நாளே தூக்கில் சடலமாக தொங்கிய நர்ஸ்.. கூட்டு பலாத்காரமா? போலீஸ் விசாரணை..!

Published : May 02, 2022, 11:19 AM IST
பணியில் சேர்ந்த முதல்நாளே தூக்கில் சடலமாக தொங்கிய நர்ஸ்.. கூட்டு பலாத்காரமா? போலீஸ் விசாரணை..!

சுருக்கம்

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் பங்கர்மாவ் பகுதியில் உள்ள நியூ ஜீவன் நர்சிங் ஹோம் என்கிற முதியோர் இல்லத்தில் செவிலியராக 18 வயது இளம்பெண் சேர்ந்துள்ளார். இவர் பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பணியில் சேர்ந்த முதல் நாளே தற்கொலை

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் பங்கர்மாவ் பகுதியில் உள்ள நியூ ஜீவன் நர்சிங் ஹோம் என்கிற முதியோர் இல்லத்தில் செவிலியராக 18 வயது இளம்பெண் சேர்ந்துள்ளார். இவர் பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செவிலியரின் சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்ததினர். 

3 பேர் மீது வழக்கு

இதனிடையே, தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இதன் பின்னணியில் முதியோர இல்லத்தின் மேலாளர் இருப்பதாகவும் அவரது தாய் குற்றம்சாட்டினார். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கற்பழிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.இருப்பினும், செவிலியரின் தாய் அளித்த புகாரின்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!