கே.வி.பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது 5 ஆக ஆக குறைக்கப்படுமா ?மத்திய அமைச்சரின் முக்கிய தகவல்

Published : Mar 31, 2022, 12:24 PM IST
கே.வி.பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது 5 ஆக ஆக குறைக்கப்படுமா ?மத்திய அமைச்சரின் முக்கிய தகவல்

சுருக்கம்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்தியது ஏன்? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.  

ஒன்றாம் வகுப்பு சேர்க்க வயது 6

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலாய பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் சிறப்பான முறையில் பாடங்களை நடத்துவதாலும், குறைவான கட்டணமாக இருப்பதாலும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களை சேர்க்க விருப்பப்படுகின்றனர். இந்த பள்ளியில் பயில மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களு தலா 10 என்ற விகிதத்தில் இடம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக  மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்தியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.  மத்திய அரசின் இந்த முடிவால் எல்கேஜி வகுப்புகளை முடித்த இலட்சக்கணக்கான குழந்தைகள்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே ஏற்கனவே நடைமுறையில் இருந்த படி ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வயதை 5 ஆக குறைக்கு திட்டம் உள்ளதா? என  மத்திய கல்வித்துறை அமைச்சரிடம்  கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் மத்திய கல்வி துறையின் தன்னிச்சையான இந்த நடவடிக்கைக்கான பின்னனி காரணங்கள் என்ன? எனவும் வலியுறுத்தியிருந்தார். எனவே மீண்டும் 5 வயதாக குறைக்கப்படுமா எனவும் கேட்டிருந்தார்.

மாநிலங்களிடம் கருத்து கேட்பு

இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. நாட்டில் பெரும்பாலான பள்ளிகள், மாநில அரசுகள், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளின் அதிகாரத்தில் உள்ளன. எனவே, முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து, மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அவற்றுள் 14 அரசுகள், வயது வரம்பு 5 ஆக இருக்க வேண்டும் என்றும், 22 அரசுகள் வயது வரம்பு 6ஆக இருக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து உள்ளன என கூறினார். நாட்டில் உள்ள சில மாநிலங்களில்  ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஐந்து வயதிலும் சில மாநிலங்களில் 6 வயதிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் இதில் ஏற்பட்டுள்ள இந்த ஒழுங்கு இன்மை, பதிவு செய்தல் பற்றிய தவறான அறிக்கைகளால் விளைகின்றது. இதனால், வெவ்வேறு மாநிலங்களில் நிகர சேர்க்கை விகிதம் பாதிக்கப்படுகின்றது. அதன்பின்னர், தேசிய அளவில் நடைபெறுகின்ற போட்டித் தேர்வுகளிலும், இந்த சிரமங்கள் எதிரொலிக்கின்றன என மத்திய அமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு

2020 புதிய கல்விக்கொள்கை, 2009 குழந்தைகள் கல்வி உரிமைச்சட்ட விதிகளின் படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், மார்ச் மற்றும் அக்டோபர் சேர்க்கை நாள்களில், முதலாம் வகுப்பில் சேருவதற்கான வயது வரம்பை, நாடு முழுமையும் ஒன்றுபோல, 6ஆக ஆக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். வயது வரம்பை குறைப்பது தொடர்பான முடிவு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் மத்திய கல்விதுதுறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?
அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்