மகாத்மா காந்தி கொலை வழக்கில் தப்பிய 3 குற்றவாளிகள் நிலை என்ன? - மறைக்கப்பட்ட உண்மைகள்

First Published Feb 20, 2017, 3:54 PM IST
Highlights


மகாத்மா காந்தியை கொலை வழக்கில் தொடர்புடைய தப்பிச்சென்ற 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா? ஏன் விடுவிக்கப்பட்டார்கள் ? என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர் மனு செய்துள்ளார்.

கொலைகுறித்த ஆய்வு

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் பான்டா. மகாத்மா காந்தி கடந்த 1948ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி நாதுராம் கோட்சே என்ற வலதுசாரி இந்து அமைப்பைச் சேர்ந்தவரால் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து ஹேமந்த்  தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.

காணவில்லை

இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹேமந்த் பான்டா மனு செய்துள்ளார்.  இது குறித்து ஹேமந்த் பான்டே கூறுகையில், “ இந்திய தேசிய ஆவண காப்பகத்தில் நான் சென்று ஆவணங்களைப் படித்ததில், இரு முக்கிய ஆவணங்கள் அங்கு இல்லை. அதில் ஒன்று கோட்சே கொல்லப்பட்டதற்கான உத்தரவும், இறுதி குற்றப்பத்திரிகையும் இல்லை.

3 குற்றவாளிகள்

அதுமட்டுமல்லாமல், 3 கேள்விகளுக்கு எனக்கு விடை  தெரியவில்லை. முதலாவதாக, மகாத்மா காந்தி கொலையில் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட கங்காதர் தஹாவாட்டே, சூர்ய தேவ் சர்மா, மற்றும் கங்காதர் யாதவ் ஆகியோர் தப்பிச் சென்றனர்.

கேள்விகள்

இவர்களைப் பிடிக்க டெல்லி போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?. இரண்டாவதாக, மேல்முறையீட்டில், அந்த 3 குற்றவாளிகளில் இருவர் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்ன?, மூன்றாவது, அதில் ஒன்று கோட்சே கொல்லப்பட்டதற்கான உத்தரவும், இறுதி குற்றப்பத்திரிகை எங்கு சென்றது என்று கேள்விகள் கேட்டு மனு செய்திருக்கிறேன்'' என்றார்.

பதில்

இது குறித்து தேசிய தகவல் உரிமை ஆணையத்தின் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு கூறுகையில், “ காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா? உள்ளிட்ட விவரங்கள் குறித்து தேசிய ஆவண காப்பகம் எந்த  கருத்தும் தெரிவிக்கவில்லை. இறுதி குற்றப்பத்திரிக்கை உள்ளது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை, ஆனால்,நீதிமன்றம் மூலம் குற்றப்பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு குற்றப்பத்திரிகை மட்டும் அதில் இருந்தது. அதையும் மனுதாரர் பார்த்துள்ளார்.

உரிமையில்லை

காந்தி கொலை வழக்கு தொடர்பாக இறுதி குற்றப்பத்திரிகை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணமல் போனதா? அல்லது அதன் கதி என்ன?, போலீசார் குற்றவாளிகளை கைது செய்தார்களா?, ஏன் விடுவிக்கப்பட்டார்கள் என்பது குறித்து தேசிய ஆவண காப்பகமும், இந்திய தொல்பொருள் அமைப்பும் கருத்தும் தெரிவிக்க உரிமையில்லை என்றார்.

ஆவணங்களை அளிக்க வேண்டும்

அதுமட்டுமல்லாமல் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு சென்ற ஆச்சார்யலு தீவிரமாக ஆய்வு செய்து, 33 பக்க இறுதி உத்தரவை பிறப்பித்தார். அதில், “  மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் குறிப்பாக துக்ளக் சாலை போலீசார், உண்மையான விசாரணை ஆவணங்களை மனு தாரருக்கு வழங்க வேண்டும். மேலும் வழக்கு குறிப்புகள், அல்லது இறுதி குற்றப்பத்திரிகை, 3 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும்.

கடமை

மகாத்மா காந்தி கொலையில் எழும் சந்தேகங்களை மக்கள் தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறது. போலீசாரும், சிறை நிர்வாகத்தினரும் தானாக முன்வந்து அனைத்து ஆவணங்களையும் அளிக்க வேண்டும். தப்பி ஓடிய 3 குற்றவாளிகள் பிடிக்க என்ன முயற்சி எடுக்கப்பட்டது?, அவர்களை ஏன் தேடவில்லை? என்பதற்கான பதிலை தெரிவிப்பது போலீசாரின் கடமை. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுமக்களின் பார்வைக்கு அளிக்க வேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமை.

உத்தரவு

ஆதலால், தேசிய ஆவணக்காப்பகம் தங்களுக்கு வந்துள்ள மனுவை துக்ளக் சாலை போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்து, காந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள், விசாரணை அறிக்கைகள், தப்பி ஓடியவர்களை பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

click me!