ஆந்திர மாநிலத்தின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்னர் தெலங்கானா, ஆந்திரா என இரண்டானது. அதையடுத்து, ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்கான பணிகளை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வந்தார். இதற்காக நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன், ஆந்திராவின் தற்போதைய தலைநகரான அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை சட்டத் (உயர் நீதிமன்றம்) தலைநகராகவும் ஏற்படுத்தி மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சம வளர்ச்சி அடைய செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யப்படும் அறிவித்தார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை கூடவுள்ளது. இதனை முன்னிட்டு, அம்மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய முதல்வர் கெஜன் மோகன், “தசரா பண்டிகையன்று விசாகப்பட்டினத்தில் இருந்து மாநில நிர்வாகம் செயல்படத் தொடங்கும்.” என அறிவித்தார். தசரா தினமான நவம்பர் 2 ஆம் தேதி முதல்வரின் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்றும், அமைச்சர்கள் அங்கிருந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேசமயம், கர்னூல் ஆந்திர மாநிலத்டின் சட்டத் (உயர் நீதிமன்றம்) தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவைத் தலைநகராகவும் செயல்படவுள்ளது.
கட்டுமான பிளாட்டுகளை முன்பதிவு செய்ய போறீங்களா? அப்படின்னா ஃபர்ஸ்ட் இத படிங்க!
மேலும், ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கட்டண மீளளிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் பலன்களை வழங்கவும் ஆந்திர அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஒவ்வோர் அரசு ஊழியரும் ஓய்வுபெறும் நேரத்தில் நிரந்தர வீடு இருக்க வேண்டும் என்றும் அமைச்சரவை முடிவு செய்தது. அரசு ஊழியர்களுக்கான உத்தரவாத ஓய்வூதியத் திட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், குருபமில் வரவிருக்கும் பொறியியல் கல்லூரியில் பழங்குடியினருக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கவும், போலவரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8,424 வீடுகள் கட்டவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.