Viral Video: சத்தீஸ்கர்|  16வயது சிறுமியை கத்தியால் தாக்கி, முடியைபிடித்து இழுத்துச் சென்ற 47வயது நபர்

By Pothy Raj  |  First Published Feb 20, 2023, 11:34 AM IST

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில், 16 வயது சிறுமியை கத்தியால் தாக்கி, தலைமுடியைப் பிடித்து 47வயது நபர் சாலையில தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.


சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில், 16 வயது சிறுமியை கத்தியால் தாக்கி, தலைமுடியைப் பிடித்து 47வயது நபர் சாலையில தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நடந்தபோது, ஒருவர்கூட அந்த சிறுமியைக் காப்பாற்ற முன்பவரவில்லை. 

Latest Videos

இந்த சம்பவம் ராய்பூர் நகரில் குடியாரி பகுதியில் நடந்துள்ளது. இந்த சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற நபர் பெயர் ஓம்கார் திவாரி. இவர் நடத்தும் கடையில இந்த சிறுமி பணியாற்றி வருகிறார்.

சிறுமியின் தலைமுடியை பிடித்த தரதரவென இழுத்துச்சென்ற நபர்!

இந்த சிறுமியைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, அவரின் குடும்பத்தாரிடம் திவாரி பேசியுள்ளார். அதற்கு சிறுமியின் பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த திவாரி, சிறுமியைக் கத்தியால் தாக்கி, அவரின் தலைமுடியைப் பிடித்து சாலையில் இழுத்துச் சென்றார்.

இந்த பதபதைக்கும் காட்சியை சாலையில் உள்ள ஏராளமானோர் பார்த்து வீடியோ எடுத்தாலும் ஒருவர் கூட தடுக்க முன்வரவில்லை. இந்த வீடியோ பலரும் சமூக வலைத்தளத்தில் பரப்பில் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, சிறுமியைக் கொடுமைப்படுத்தி தாக்கிய திவாரியை போலீஸார் கைது செய்தனர்.

சத்தீஸ்கர்| காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவு ரெய்டு

16வயது சிறுமியின் உடல்நிலை மோசமானநிலையில் இருப்பதால், மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிரமான கண்காணிப்பில் உள்ளார். ராய்ப்பூர் காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த்  அகர்வால் கூறுகையில்  “ அந்த சிறுமி வேலை செய்த கடைசியின் உரிமையாளர் திருமணம் செய்யக் கோரி தொந்தரவு செய்யவே அந்த சிறுமி மறுத்துள்ளார், வேலையில் இருந்தும் விலகிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கூர்மையான ஆயுதத்தால் அந்த சிறுமியைத் தாக்கி, தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளார்” எனத் தெரிவித்தார்

 

ये वीडियो छत्तीसगढ़ की बताई जा रही है। महिला को बुरी तरह घायल कर बाल पकड़कर सड़क पर खींच रहा है ये राक्षस। इतने लोग ये सब होता देख रहे हैं लेकिन कोई आगे बढ़कर मदद नहीं कर रहा। कहाँ है प्रशासन ?? pic.twitter.com/L5AfGaGXgQ

— Swati Maliwal (@SwatiJaiHind)

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவு செய்து கண்டித்துள்ளார். அவர் பதிவிட்டகருத்தில்  “ இவை அனைத்தும் நடக்கும்போது ஏராளமான மக்கள் பார்த்துள்ளனர். ஆனால், ஒருவர்கூட உதவி செய்ய முன்வரவில்லை. நிர்வாகம் எங்கே இருக்கிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் “ கடந்த சனிக்கிழமை இரவு திவாரி குடித்துவிட்டு, அந்த சிறுமியின் வீட்டின் முன் தகராறு செய்து சத்தமிட்டார். அப்போது திடீரென தாந் வைத்திருந்த கத்தாயில் சிறுமியைத் தாக்கினார் அந்த சிறுமி தப்பித்து  ஓடியபோது, அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றார். ஒருகட்டத்தில் அந்தச் சிறுமி மயங்கி சாலையில் விழுந்ததும் அவரை விட்டுவிட்டு சென்றார்” எனத் தெரிவித்தார்
 

click me!