ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் குறித்த பல கட்டுக்கதைகளை சிறு வயது முதலே கேட்டிருப்போம். குறிப்பாக பல தலைமுறைகளாக பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வழங்கப்படும் என்பதை நம்பி வளர்ந்தவர்கள் தான் 90ஸ் கிட்ஸ்.
உலகில் உள்ள பிற ஆடம்பர கார்களை ஒப்பிடும் பொழுது, விலை சற்று குறைவாக இருந்தாலும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு என்று ஒரு தனி மவுசு எப்பொழுதும் இருந்து வருகிறது. இன்றளவும் ஒரு தனி மனிதனுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வாங்குவது என்பது ஒரு கனவு என்றே கூறலாம். ஆனால் அம்பானியின் குடும்பத்தை பொறுத்த வரை அவர்கள் பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக்கிக் கொள்ளும் அளவிற்கு பணக்காரர்கள் என்பது நாம் அறிந்ததே.
அம்பானி குடும்பத்தினருக்கு rolls-royce கார்கள் மீதான ஒரு தீரா காதல் உள்ளது என்று கூறப்படுகிறது. காரணம் அவர்கள் வீட்டில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் cullinan என்ற மாடல் கார்கள் மட்டும் நான்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் பாஜக முன்னால் எம்எல்ஏ ஒருவர் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்து இறங்கியது அவர்களிடம் உள்ள நான்கு கல்லினன் கார்களில் ஒன்றில் தான்.
சுமார் 6.75 லிட்டர் ட்வின் டர்போஜெட், பி 12 பொருத்தப்பட்ட பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த கார் ஒரு ரதம் என்று அழைத்தால் அது மிகையல்ல. அனந்த் அம்பானி வந்து இறங்கிய இந்த காரின் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய், ஆனால் அவரது அதில் பல மாற்றங்கள் செய்து, கஸ்டமைஸ் செய்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளதால் அந்த காரின் விலை தற்பொழுது சுமார் 14 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
ஒரு பிரபல யூட்யூப் சேனலில் அவர் அந்த நிகழ்ச்சிக்கு அந்த சொகுசு காரில் வந்திறங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா: சந்தன மரக்கட்டை கடத்தல்.. போலீஸ் அதிரடி சேஸிங்.. கடத்தல்காரர்கள் 3 பேர் கைது