Earthquake : தொடர்ந்து 2 முறை பெங்களூரில் நிலநடுக்கம்.. பதற்றத்தில் பொதுமக்கள்..!

Published : Dec 22, 2021, 11:35 AM IST
Earthquake : தொடர்ந்து 2 முறை பெங்களூரில் நிலநடுக்கம்.. பதற்றத்தில் பொதுமக்கள்..!

சுருக்கம்

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம்  பெங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது சிக்பல்லாப்பூர் மாவட்டம். இன்று காலை 7.14 மணியளவில் திடீரென சிக்கபல்லாபுரா நகரில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1-ஆக பதிவாக்கியுள்ளது.

கடந்த மாதம்  12  ஆம் தேதி  இதே  சிக்பல்லாப்பூரா  மாவட்டத்தில்  மாலை மற்றும் இரவில் என  மொத்தமாக 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள  சிந்தாமணி, மிட்டஹள்ளி, அப்சனஹள்ளி,கொடகன்லு ஆகிய கிராமங்களில்   நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஒரு மாதத்திற்குள்ளாக மீண்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதே ஆண்டில் இரண்டாவது முறையாக சிக்கபல்லாபூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அடுத்தடுத்து  இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என  கூறப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம்  குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நில அதிர்வு பெங்களூர் மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!