
ஹரியானா மாநிலம், மீவட் பகுதியில் திறந்த வௌிக் கழிப்பிடங்கள் இல்லாத ஒரு கிராமத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயர் சூட்டப்பட உள்ளது.
சுலப் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஹரியானாவில் உள்ள பல கிராமங்களில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இப்போது மேவாட் பகுதியில் உள்ள பல கிராமங்களில் திறந்த வௌிக்கழிப்பிடம் இல்லாத சூழலை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், ஒரு கிராமத்துக்கு ட்ரம்ப் கிராமம் என பெயர் சூட்டப்பட உள்ளது .
வாஷிங்டனில் சமூக சேவை நிறுவனமான சுலப் இண்டர்நேஷனல் சார்பில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்போது, இந்த அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் பேசுகையில், “ இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் ஹரியானா மாநிலம்மேவட் பகுதியில் உள்ள ஒரு ஊருக்கு ட்ரம்ப் கிராமம் எனப் பெயரிடப்படுகிறது.
எந்த கிராமம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அந்த மேவாட்பகுதி கிராமமக்களைச் சந்தித்து பேசி, அவர்களுடன் கலந்தாய்வு செய்து முடிவை அறிவிப்பேன். மோடி அரசும் திறந்த வௌிக் கழிப்பிடங்களை நீக்க மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி வருகிறது. எங்களின் இந்த முயற்சி பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்கும் ’’ என்றார்.
இந்த செய்தியை அறிந்ததும் மேவாட் பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகவும்ஆச்சயர்யம் அடைந்தனர்.