வெற்றிக் கொண்டாட்டத்தில் பா.ஜ.க….மகாராஷ்ட்ராவில் உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி சாதனை…

 
Published : Feb 24, 2017, 09:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
வெற்றிக் கொண்டாட்டத்தில் பா.ஜ.க….மகாராஷ்ட்ராவில் உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி சாதனை…

சுருக்கம்

வெற்றிக் கொண்டாட்டத்தில் பா.ஜ.க….மகாராஷ்ட்ராவில் உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி சாதனை…

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற  தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிசத்துள்ளார்.

 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மும்பை, தானே, புனே, நாசிக், நாக்பூர், உல்லாஸ்நகர், பிம்ரி- சிஞ்ச்வாட், சோலாப்பூர், அகோலா, அமராவதி ஆகிய 10 மாநகராட்சிகளுக்கும், 25 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும், 283 பஞ்சாயத்து சமிதிகளுக்கும் இரண்டு கட்டமாக கடந்த 16 மற்றும் 21-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

சிவசேனா, பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளும் தனித் தனியாக தேர்தலை சந்தித்தன.

இந்நிலையில் மும்பை மாநகராட்சி உள்பட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற  தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சி கடந்த 20 ஆண்டுகளாக சிவசேனா தனது வசத்தில் வைத்திருந்தது ஆனால் இம்முறை பா.ஜ.க. 82 இடங்களை கைப்பற்றியுள்ளது.

புனே, நாக்பூர், நாசிக், உல்லாஸ்நகர், அமராவதி, அகோலா, பிம்ரி-சிஞ்ச்வாட் ஆகிய மாநகராட்சிகளிலும் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது.

மேலும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட  18 மாவட்ட பஞ்சாயத்துகளில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளை பா.ஜ.க. கைப்பற்றியது.

 


பா.ஜ.கவுக்கு  ஆதரவு அளித்த மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

விசா தேதி முடிந்தால் தங்க முடியாதா? அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!
அவள் நரகத்துக்கே போகட்டும்.. நிதிஷ் குமாரின் செயலுக்கு ஆதரவாக பேசிய பாஜக தலைவர்!