”துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவேன்..” - வெங்கையா நம்பிக்கை!

First Published Jul 24, 2017, 5:10 PM IST
Highlights
venkaiah talks about vice president election


தனக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவிற்கு நன்றி எனவும், துணை ஜனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிகாலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் அடுத்த துணை ஜனாதிபதியின் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதையடுத்து எதிர்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரனாகிய கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை நிறுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து திமுகவிடமும் அதிமுகவிடமும் கோபால கிருஷ்ண காந்தி ஆதரவு கோரினார்.

இதைதொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக வெங்கையா நாயுடுவை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.

இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை ஜூலை 18 ஆம் தேதி கோபால கிருஷ்ண காந்தியும் வெங்கையா நாயுடுவும் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் வெங்கையா நாயுடுவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு, தனக்கு 32 கட்சிகளின் ஆதரவு இருப்பதாகவும், துணை ஜனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனவும், தெரிவித்தார்.

மேலும் தனக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவின் இரு அணிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அரசியலை விட்டு விலகி இருப்பதாகவும் வெங்கையா தெரிவித்தார். 

click me!