ஆர்டர் செஞ்சது வாட்ச்.. வந்ததோ மாட்டு சாணம்.. என்னடா பித்தலாட்டம் இது - வைரல் சம்பவம்

Published : Oct 10, 2022, 07:11 PM ISTUpdated : Oct 10, 2022, 07:17 PM IST
ஆர்டர் செஞ்சது வாட்ச்.. வந்ததோ மாட்டு சாணம்.. என்னடா பித்தலாட்டம் இது - வைரல் சம்பவம்

சுருக்கம்

ஆன்லைனில் நாம் ஆர்டர் செய்யும் பொருள் ஒன்றும், வரும் பொருள் வேறொன்றும் இருப்பதாக தற்போது வரிசையாக புகார்கள் குவிந்து வருகிறது.

அமேசான், பிளிப்கார்ட், மீசோ உட்பட பல்வேறு ஷாப்பிங் இணையதளங்கள் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்தால் அவை ஒருசில நேரம் சரிவர வந்து சேர்வது கிடையாது. நாம் ஆர்டர் செய்தது ஒரு பொருளாக இருந்தால், வந்தது மற்றொரு பொருளாக இருக்கும்.

சில நேரங்களில் விலை உயர்ந்த செல்போன் போன்ற பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு செங்கல், சோப்பு டப்பா போன்றவையும் அனுப்பி வைக்கப்பட்ட கொடுமையும் நடந்துள்ளது. தற்போது கூட ஐபோன் 13 மாடல் மொபைலை ஆர்டர் செய்தவருக்கு, ஐபோன் 14 மாடல் மொபைல் வந்தது.

இதையும் படிங்க..திருமணம் ஆனவருடன் பாலியல் உறவு கொண்ட பெண்.. நீதி கேட்ட பெண்ணுக்கு கோர்ட் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு !

இது அனைவரிடமும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேவில், ரூ. 1,304 மதிப்புள்ள கடிகாரத்தை ஆர்டர் செய்துள்ளார். செப்டம்பர் 28 ஆம் தேதி அவரது ஆர்டர் வந்தது.

அதைத் தொடர்ந்து அவர் டெலிவரிக்கு பணத்தை கொடுத்துவிட்டு, பிறகு பார்சலை திறந்து பார்த்துள்ளார். அதில் கடிகாரத்துக்கு பதில் மாட்டு சாணம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், டெலிவரி பாயை அழைத்து பணத்தை திரும்ப பெற்று கொண்டார்.

இதையும் படிங்க..ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக

இதேபோன்ற மற்றொரு சம்பவமும் நடைபெற்றுள்ளது. யஷஸ்வி ஷர்மா என்ற வாடிக்கையாளர், பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது தனது தந்தைக்கு மடிக்கணினியை ஆர்டர் செய்ததாகவும், ஆனால் அதற்கு பதிலாக சில சோப்பு பார்கள் கிடைத்ததாகவும் கூறினார். இந்த சம்பவங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!