
24 அனுபவமுள்ள "Rat Hole Mining" நிபுணர்கள் குழு துளையிடும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது மற்றும் சிக்கிய தொழிலாளர்களை நோக்கி ஒரு குறுகிய பாதையை தற்போது அமைத்து வருகின்றது. கொஞ்சம் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் இந்த பணியில், குப்பைகளை அகற்றுவது மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு பாதுகாப்பான பாதையை உருவாக்குவது ஆகியவை அடங்கும். மீட்புக் குழுவிலிருந்து 5 மீட்டர் தொலைவில் தான் இப்பொது தொழிலாளர்கள் உள்ளனர்.
தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப்பாதையில், இயந்திர பணிகள் ஒருபுறம் இருக்க, கையால் தோண்டும் பணி நேற்று தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை இடிபாடுகளில் சிக்கிய பெரிய ஆஜர் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆரம்ப துளையிடும் முயற்சிகள் நடத்தப்பட்டன, இது மாற்று வழிகளைக் கண்டறிய அதிகாரிகளைத் தூண்டியது. சுரங்கப்பாதைக்கு மேலே இருந்து செங்குத்து துளையிடுதல். தேவையான 86 மீட்டர் செங்குத்து துளையிடுதலில் தோராயமாக 40% நிறைவடைந்துள்ளது.
மற்றொரு கோவிட் போன்ற தொற்றுநோய் சீனாவில் இருந்து வருகிறதா? எய்ம்ஸ் மருத்துவர் சொன்ன தகவல்..
சரி RAT HOLE MINING என்றால் என்ன?
எலி தன் வலையை தோண்டும் விதத்தை அடிப்படையாக கொண்டு இந்த Rat Hole Mining செயல்படுத்தப்படுகிறது. இந்த முறை மேகாலயாவில் பரவலாக உள்ள சுரங்கம் தோண்டும் முறை, குறுகிய மற்றும் கிடைமட்ட நிலையில் இருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் முறையாகும். தரையில் தோண்டப்பட்ட குறுகிய குழிகளைக் இது குறிக்கும். பொதுவாக ஒரு நபர் இறங்கி நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் அளவுக்கு இது பெரிதாக இருக்கும்.
சரி ஏன் இது தடைசெய்யப்பட்டுள்ளது?
இந்தியாவில் இந்த வகை Rat Hole Mining முறையில் தோண்டுவது சட்டவிரோதமானது, ஏனெனில் இது கடுமையான சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்துகிறது மற்றும் அதில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்படும் குழந்தைகளின் மரணத்திற்கும் இது காரணமாகிறது. குறிப்பாக மேஹாலயாவில் இந்த முறையை பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியபோது பலர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவின் தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட ஒரு சட்டப்பூர்வ ஏறிவிப்பில் இந்த Rat Hole Mining முறையை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிற இயற்கை வளங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க இந்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உதவுகிறது.