Asianet News TamilAsianet News Tamil

பிறப்புறுப்பில் காயங்கள்.. சொந்த மகளை காதலனுக்கு இரையாக்கிய கொடூர தாய் - கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Thiruvananthapuram : பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்சோ (POCSO) வழக்கில், கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது அம்மாநில நீதிமன்றம். நேற்று திங்கள்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Kerala woman jailed after letting her boyfriend to sexually abuse minor daughters ans
Author
First Published Nov 28, 2023, 9:13 AM IST | Last Updated Nov 28, 2023, 9:13 AM IST

அம்மாநில ஊடங்கள் அளித்த தகவலின்படி, அந்த கொடூர சம்பவம் கடந்த மார்ச் 2018 மற்றும் செப்டம்பர் 2019க்கு இடையில் நடந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட கணவரை விட்டு வெளியேறிய அந்த குற்றம் சாட்டப்பட்ட பெண், சிசுபாலன் என்ற தனது காதலருடன் வசித்து வந்துள்ளார். அப்போது தான் பல முறை, அந்த காதலில் காம இச்சைக்கு தனது மகளை அவர் இரையாக்கியுள்ளார். 

2018 முதல் 2019 வரை, அந்த கொடூர தாய் பலமுறை அந்த குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவருக்கு இரையாக்கியதோடு, அவர் முன்னிலையில் தான் அந்த குழந்தையை பல கொடுமைகளை அனுபவித்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்களும் இருந்துள்ளது.

சக மாணவரை 108 முறை காம்பஸால் குத்திக் கிழித்த 4ஆம் வகுப்பு மாணவர்கள்! 

பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் பதினொரு வயது சகோதரி வீட்டிற்கு வந்தபோது, ​தனக்கு நடந்தது குறித்து அவரிடம், பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். ஆனால் அந்த மூத்த குழந்தையையும் சிசுபாலன் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மிரட்டியதால், அந்த இரு குழந்தைகளும் யாரிடமும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அந்த மூத்த சிறுமி தனது தங்கையுடன் சேர்ந்து தப்பித்து அவர்களின் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். பாட்டியிடம் நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தி, அவர் தான் அந்த குழந்தைகளை குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றியுள்ளார்.

பேசுவதை நிறுத்தியதால் சக நண்பனின் கழுத்தை அறுத்த கல்லூரி மாணவன்; கல்லூரி வாகனத்தில் நடந்த கொலை முயற்சி

அங்கு நடந்த ஒரு கலந்தாய்வில் தான் தங்களுக்கு நடந்த கொடூரங்களை அந்த சிறுமிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அந்த கொடூர தாய்க்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்து, 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 7 மற்றும் 11 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்த அந்த நபர் விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios