அமெரிக்க நுண்ணறிவு பிரிவு இயக்குநர் துளசி கப்பார்டு இந்தியா வருகை

அமெரிக்க தேசிய நுண்ணறிவுப் பிரிவு இயக்குநர் துளசி கப்பார்டு இந்தியா வந்திருக்கிறார். டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறை அதிபரான பிறகு முதல் முறையாக அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.


அமெரிக்க தேசிய நுண்ணறிவுப் பிரிவு இயக்குநர் துளசி கப்பார்ட் ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்திருக்கிறார். இந்தப் பயணத்தில் அவர் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகள் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்த இருக்கிறார்.

குறிப்பாக, திங்கட்கிழமை நடைபெறும் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை மாநாட்டில் துளசி கப்பார்டு பங்கேற்கிறார். இந்த மாநாடு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற உள்ளது. நாடுகளிடையே பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் உளவுத்துறை பகிர்வு ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த மாநாடு முயல்கிறது.

Latest Videos

டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறை அதிபரான பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் முதல் உயர்மட்ட அமெரிக்க அதிகாரி துளசி கப்பார்ட் ஆவார். விரைவில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் வருகையை இறுதி செய்ய இரு தரப்பினரும் தொடர்பில் உள்ளனர்.

மூன்று நாள் இந்திய பயணத்தின் போது, ​​கப்பார்ட் திங்கட்கிழமை தொடங்கும் ரைசினா உரையாடலில் உரையாற்றுவார். கப்பார்ட் தனது வருகையின்போது பிரதமர் மோடியையும் சந்திக்க வாய்ப்புள்ளது. கடந்த மாதம் அமெரிக்கா பயணத்திம் மேற்கொண்ட மோடி, அங்கு துளசி கப்பாடைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

கனடாவின் புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளி பெண்கள்!

click me!