ஹால்டிக்கெட்டில் மாணவர் படம் இருக்க வேண்டிய இடத்தில், நடிகரின் புகைப்படம்; நொந்து போன மாணவர்

By sathish kFirst Published Sep 4, 2018, 10:53 AM IST
Highlights

உத்திர பிரதேசத்தில் உள்ள ஃபசாபாத் எனும் இடத்தில் இயங்கி வரும், ”டாக்டர் ராம் மனோஹர் லோஹியா ஆவத் பல்கலைகழகத்தில்” இருந்து வழங்கப்பட்டிருக்கும் ஹால் டிக்கெட்டில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் படம் இடம் பெற்றிருக்கிறது. 

உத்திர பிரதேசத்தில் உள்ள ஃபசாபாத் எனும் இடத்தில் இயங்கி வரும், ”டாக்டர் ராம் மனோஹர் லோஹியா ஆவத் பல்கலைகழகத்தில்” இருந்து வழங்கப்பட்டிருக்கும் ஹால் டிக்கெட்டில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் படம் இடம் பெற்றிருக்கிறது. உத்திர பிரதேசத்தை சேர்ந்த அமித் எனும் மாணவர், அங்கு உள்ள “ரவீந்திர சிங் ஸ்மாரக் மஹா வித்யாலயா” எனும் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார்.

சமீபத்தில் அமித் படித்து வந்த கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டுகள் மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்தில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஹால் டிக்கெட்டில் அமித்தின் படத்திற்கு பதிலாக அமிதாப்பச்சனின் படம் இடம் பெற்றிருந்திருக்கிறது. இதனால் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறார் அமீத்.

மாணவர்களுக்கு வழங்கும் ஹால்டிக்கெட் விஷயத்தில் பல்கலைக்கழகம் இவ்வளவு அலட்சியமாக இருந்தது, அமித்திற்கு அதிர்ச்சி அளித்திருக்கது. இதுவே இப்படி என்றால் இனி எனக்கு வழங்கும் சான்றிதழிலும் அமிதாப் பச்சன் படம் தான் இடம் பெறுமா? என நொந்து போயிருக்கிறாற் அமீத் எனும் அந்த மாணவர்.

இது குறித்து கல்லூரியில் இருக்கும் அதிகாரிகள் பேசும் போது , ஒருவேளை அமித் அப்ளிகேஷனை பூர்த்தி செய்து அனுப்பிய போது, இண்டெர்னெட் செண்டரில் வைத்து ஏதாவது குளறுபடி நடந்திருக்கலாம். அல்லது  பல்கலைக்கழகத்தில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம். என தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் அமீத் கூறும் போது தான் சரியாக தான் அப்ளிகேஷனை பூர்த்தி செய்ததாக தெரிவித்திருக்கிறார். அமித் என பெயர் வைத்ததற்காக அமிதாப் பச்சனின் படத்தை போட்டு ஹால்டிக்கெட் வந்ததால் குழம்பி இருக்கும் அமித்-க்கு இது மேலும் தலைவலியாக அமைந்திருக்கிறது. இதை தொடர்ந்து அவரது ஹால்டிக்கெட் மற்றும் சான்றிதழ்களில் அமித்தின் உண்மையான படம் இடம் பெற, உரிய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம்.

click me!