காதலிப்பதால் படிக்க முடியவில்லை... அதனால் தேர்வெழுத முடியவில்லை... விடைத்தாளில் சொந்தக்கதையை எழுதிய மாணவன்!

 
Published : Apr 01, 2018, 03:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
காதலிப்பதால் படிக்க முடியவில்லை... அதனால் தேர்வெழுத முடியவில்லை... விடைத்தாளில் சொந்தக்கதையை எழுதிய மாணவன்!

சுருக்கம்

U.P. twelfth Board Exams Love story written in the student answer sheet

பிளஸ் 2 பொதுத் தேர்வில், தன்னை பாஸ் செய்து வைக்கும்படி, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சில வரிகளில் கோரிக்கை வைப்பதுண்டு. ஆனால், தான் காதலில் விழுந்ததால் தேர்வுக்கு படிக்க முடியவில்லை; அதனால் தன்னை பாஸ் செய்து விடும்படி மாணவன் ஒருவன் கோரிக்கை விடுததுள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிளஸ் 2 பொது தேர்வு அண்மையில் நடந்து முடிந்தது. தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆசிரியர் ஒருவர் விடைத்தாள் ஒன்றை திருத்தும்போது காதல் கதையும் ஒன்று எழுதி இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார். 

அந்த மாணவன் தனது விடைத்தாளில், தான் பூஜா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். தான் காதலில் விழுந்ததால், தேர்வுக்காக படிக்க முடியவில்லை என்றும் மாணவன் அதில் எழுதியுள்ளார்.

மற்றொரு மாணவன் ஒருவன், விடைத்தாளில் சில ரூபாய் நோட்டுகளை வைத்து அனுப்பியுள்ளார். தேர்வில் எப்படியாவது தன்னை பாஸ் செய்து விடுமாறு விடைத்தாளில் கோரிக்கை விடுத்துள்ளான்.

தனக்கு தாய் இல்லை என்றும் தந்தை மட்டுமே இருப்பதாகவும் கூறிய அந்த மாணவன், தேர்ச்சிபெறவில்லை என்றால் என்னை கொன்று விடுவார் என்றும் எதியுள்ளான். 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!