உத்தரப் பிரதேசத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2024!

By SG BalanFirst Published Sep 24, 2024, 4:38 PM IST
Highlights

உ.பி. சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024, உத்தரப் பிரதேசத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற உள்ளது. கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 25 முதல் 29 வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்கள் கலந்துகொள்கிறார்கள்.

உ.பி. சர்வதேச வர்த்தக கண்காட்சி (UPITS) 2024, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 25 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக ப்ராஜ், பூர்வாஞ்சல், பஸ்சிமாஞ்சல், அவத், ரோஹில்கண்ட் மற்றும் பண்டேல்கண்ட் போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை உத்தரப் பிரதேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய உள்ளன.

Latest Videos

உள்ளூர் நாட்டுப்புற நடன வடிவங்களான ஃபருவாஹி, தரு ஆதிவாசி, தோபியா, ராய், மற்றும் தெதியா ஆகியவை இந்த விழாவில் சிறப்பிடம் பெறும். உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள பாரம்பரியக் கலைஞர்கள் தங்கள் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

குறிப்பாக, ஆக்ராவின் ப்ரீத்தி சிங் ஹனுமான் சாலிசா நடன நாடககத்தை நிகழ்த்த இருக்கிறார். சஹரன்பூரின் ரஞ்சனா நெப் ராம கதையின் அடிப்படையிலான கதக் நிகழ்ச்சியை நடத்துவார்.

ரஷ்யா, பொலிவியா, கஜகஸ்தான், பிரேசில், வெனிசுலா, எகிப்து மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கலைஞர்களும் கலந்துகொண்டு, அவர்களின் கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) இந்த சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஐந்து நாள் திருவிழாவில் பிரயாக்ராஜின் நீலாக்ஷி ராய் பிரேம் கே ரங், கிருஷ்ணா கே சங் என்ற நிகழ்ச்சி முக்தகாஷியில் நடைபெறும். நொய்டாவைச் சேர்ந்த மாதவி மதுகரின் பக்தி பஜனை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. பாலிவுட் பாடகர்களான அங்கித் திவாரி மற்றும் கனிகா கபூர் ஆகியோர் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். பவன்தீப் மற்றும் அருணிதா உள்ளிட்ட நட்சத்திரங்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் பாரம்பரியத்தை உலகளாவிய மேடையில் வெளிப்படுத்தும் வாய்ப்பை இந்த கண்காட்சி வழங்குகிறது. இதன் மூலம் உள்ளூர் நாட்டுப்புற கலாச்சாரத்தை மேம்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு  முயல்கிறது. பந்தல்கண்டி நாட்டுப்புற பாடல்கள் முதல் கிருஷ்ண பக்தி பஜனைகள் வரை பல நிகழ்ச்சிகள் இருக்கும். இது விழாவில் பங்கேற்பவர்களுக்கு ஆழமான கலாச்சார விருந்தாக அமையும்.

click me!