அறுவை சிகிச்சைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமயைில் அனுமதி..!

Published : Sep 04, 2019, 03:55 PM IST
அறுவை சிகிச்சைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமயைில் அனுமதி..!

சுருக்கம்

தனியார் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நடந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி உள்ளார். 

தனியார் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நடந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி உள்ளார். 

பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு திடீர் வருகை தந்தார். இன்று காலை இங்குள்ள கே.டி.மருத்துவமனைக்கு சென்றார். சில பரிசோதனைகள் அவருக்கு செய்யப்பட்டது. 

அப்போது, அமித் ஷாவுக்கு கழுத்துக்குப் பின்புறத்தில் கொழுப்பு போன்ற கட்டி இருந்துள்ளது. இதனால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், அதை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதற்கு முடிவு செய்தார். 

அவருக்கு மயக்க மருந்து அளித்து மருத்துவர்கள் அந்தக் கட்டியை நீக்கினர். இதையடுத்து சிறிது நேரம் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து பின்னர் வீடு திரும்பினார். அவர் அவர் நலமுடன் இருப்பதாகவும், வீடு திரும்பியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
IndiGo: இனி எந்த விமானமும் தாமதம் இல்லை..! கண்ட்ரோல் ரூமில் நின்று கண்காணிக்கும் மத்திய அமைச்சர்