ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க கோரிய சீனாவின் கோரிக்கையை பெரும்பாலான உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர்.
இதனால் மீண்டும் ஒரு முறை காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் மூக்கு உடைந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதோடு, அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் அரண்டு போனது. மேலும், காஷ்மீரில் விவகாரத்தில் இந்தியா மீது உலக அமைப்புகளில் பொய் குற்றச்சாட்டுக்களை சொல்லி வந்தது. ஆனால் சீனாவை தவிர்த்து உலக நாடுகள் எதுவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாயே திறக்கவில்லை.
undefined
இதனையடுத்து, தனது நெருங்கிய நட்பு நாடான சீனா வாயிலாக பாகிஸ்தான் காயை நகர்த்த தொடங்கியது. கடந்த மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க சீனா கோரிக்கை விடுத்தது.
ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது கோரிக்கையை சீனா திரும்ப பெற்றது.
இருந்தாலும் பாகிஸ்தானின் தொடர் வற்புறுத்தலால் காரணமாக நேற்று நடைபெற்ற ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில், பிற விஷயங்களின் கீழ் காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க கோரிக்கை விடுத்தது.
ஆனால் கடந்த முறை போல் கவுன்சிலில் உள்ள மற்ற உறுப்பு நாடுகள் சீனாவின் கோரிக்கையை நிராகரித்தன. காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க இது இடம் இல்லை என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்து விட்டது. ஆக, தொடர்ந்து 2வது முறையாக இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா மீண்டும் அவமானப்பட்டுள்ளது.