டிரம்ப் சம்மதித்தார், மோடி சிரித்தார், நான் சிலிர்த்தேன்..!

By Vishnu PriyaFirst Published Sep 26, 2019, 6:12 PM IST
Highlights

எளிதாக தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. பெரிய சந்தைகள் வருவதை விரும்புகிறோம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. -    நரேந்திர மோடி 

* முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, வக்பு வாரியத்தின் சொத்துக்களில் உரிமை வழங்கப்பட வேண்டும். முத்தலாக் நடைமுறையால்  கணவனை பிரிந்த இஸ்லமிய பெண்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வரை ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவி தொகையும், வழக்கு விசாரணைக்கான உதவி தொகையும் வழங்கப்படும். (யோகி ஆதித்யநாத் - உ.பி.முதல்வர்)

* நாட்டில் எமர்ஜென்ஸியை அமல்படுத்திய காங்கிரஸுக்கு, ஜனநாயகத்தை பற்றிப் பேச அருகதை இல்லை. லஞ்சம், ஊழல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மக்கள் அனைவருக்கும் ஒரே அடையாள அட்டையை கொண்டு வரப்பட இருக்கிறது. -    இல.கணேசன் (பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர்)

* சின்னஞ்சிறு குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணமாக இருக்கும் அ.தி.மு.க. அரசு அலட்சியமாகவும், மெத்தனமாகவும் உள்ளது. நோயிலிருந்து மக்களை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்காமல் வீண் அரசியல் செய்து கொண்டுள்ளனர். -மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

* மனிதநேய சாதனையாளர் விருது! எனும் விருதானது தனிப்பட்ட எனக்கு வழங்கப்படவில்லை. ஈ.வெ.ராவின் தொண்டன் என்பதால் வழங்கப்பட உள்ளது. இந்த  உயரிய விருத்துக்கு உரியவர் ஈ.வெ.ராதான். கறுப்புச் சட்டை தோழர்களின் ஒத்துழைப்புக்கு கிடைத்த விருது இது. -கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

* ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க நினைத்த எங்களின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது என்பது உண்மைதான். இது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த விஷயத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு எந்த நெருக்கடியும் இல்லை.- இம்ரான் கான் (பாகிஸ்தான் பிரதமர்)

* தாதா சாகேப்பின் சிறப்புகள் எனக்குத் தெரியாது. அவரின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ படத்தை பத்து நிமிடங்களுக்கு மே பார்க்க முடியவில்லை. ஆனால் அமிதாப்பச்சனின் படங்களை பத்து முறைக்கு மேல் கூட பார்த்திருக்கிறேன். அப்படி என்றால் தாதா சாகேப் பால்கேவுக்குதான் அமிதாப் விருது வழங்கப்பட வேண்டும். -    ராம்கோபால் வர்மா (சினிமா இயக்குநர்)

* தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையிலான சிறு சிறு பிரச்னைகளை பேசி தீர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இரு முதல்வர்களும் பேச்சை துவக்கி உள்ளோம். இருமாநில தலைமைச் செயலர்கள் தலைமையில் கமிட்டி அமைக்கப்படும். ஆண்டுக்கு இரு முறை இரு மாநில தலைமைச் செயலர்களும் சந்தித்துப் பேசுவார்கள். -எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

* எளிதாக தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. பெரிய சந்தைகள் வருவதை விரும்புகிறோம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. -    நரேந்திர மோடி (இந்திய பிரதமர்)

* செல்ஃபி எடுக்கலாமா என்று கேட்டேன். ‘அதற்கென்ன தாராளமாக?’ என்று டிரம்ப் கூறினார். பிரதமர் மோடியிடம் கேட்டதற்கு அவர் சிரித்துக் கொண்டே சம்மதம் தெரிவித்துவிட்டார். நான் சிலிர்ப்பாக உணர்ந்தேன். -    சாத்விக் ஹெக்டே  (டிரம்ப், மோடியுடன் ஒன்றாக செல்ஃபி எடுத்த சிறுவன்)

click me!