திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்; ஒபிசி பிரிவில் சேர்ப்பு: ஜார்கண்ட் அரசு ஒப்புதல்!

By Manikanda Prabu  |  First Published Sep 7, 2023, 2:41 PM IST

திருநங்கைகள் சமூகத்தை ஓபிசி பிரிவில் சேர்க்க ஜார்கண்ட் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது


ஜார்கண்ட் மாநிலத்தில் முதன்முறையாக அம்மாநில திருநங்கைகள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், அவர்கள் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டின் பலன்களையும் பெற முடியும்.

திருநங்கைகளை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்ப்பதை தவிர, 34 திட்டங்களுக்கும் ஜார்கண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், திருநங்கைகளுக்கு மாநில சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

2011 ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில் திருநங்கைகளின் மக்கள் தொகை சுமார் 11,900 ஆக இருந்தது, இது தற்போது கிட்டத்தட்ட 14,000 ஆக இருக்கும் என அம்மாநில பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை தேரிவித்துள்ளது. இடஒதுக்கீட்டின் வேறு எந்த பிரிவிலும் சேர்க்கப்படாத திருநங்கைகள் பட்டியலில் 46ஆவது இடத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சரவை செயலாளர் வந்தனா டாடெல் கூறியுள்ளார்.

“முதலில், திருநங்கைகள் மூன்றாம் பாலினமாக அறிவிக்கப்பட வேண்டும், இரண்டாவதாக, இடஒதுக்கீட்டின் கீழ் வேறு எந்தப் பிரிவின் கீழும் வராத திருநங்கைகள், வரிசை எண் 46 இல் உள்ள OBC பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என இரண்டு பகுதிகளை முன்மொழிவு கொண்டுள்ளது.” என வந்தனா டாடெல் தெரிவித்துள்ளார்.

விதிகளின் அடிப்படையில் உலக ஒழுங்கு: ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு!

அதேசமயம், அவர்கள் ஏற்கனவே ST/SC, அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற வேறு எந்தப் பிரிவின் கீழும் உள்ளடக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஏற்கனவே ஏதாவது வகையிலான இடஒதுக்கீட்டை பெற்றிருந்தாலோ அரசின் இந்த அறிவிப்பின் கீழ் அவர்கள் தகுதி பெற மாட்டார்கள் எனவும் அமைச்சரவை செயலாளர் வந்தனா டாடெல் தெரிவித்துள்ளார்.

மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு திட்டத்தின் கீழ், திருநங்கைகளுக்கும் மாநில சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தின் பலன்களை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2020-2021 முதல் 2022-2023 நிதியாண்டில் 8 ஆம் வகுப்பில் படிக்கும் எஸ்டி/எஸ்சி, ஓபிசி மற்றும் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள் வாங்குவதற்காக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் வழங்கப்படும்.” என அமைச்சரவை செயலாளர் வந்தனா டாடெல் தெரிவித்துள்ளார். அதேசமயம், அதேசமயம், 2023- 2024 மற்றும் 2024 - 2025 நிதியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சைக்கிள்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்படும் எனவும் அவர் கூறினார்.

click me!