கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்டர்நெட்….TRAI பரிந்துரை….

Asianet News Tamil  
Published : Dec 20, 2016, 04:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்டர்நெட்….TRAI பரிந்துரை….

சுருக்கம்

கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்டர்நெட்….TRAI பரிந்துரை….

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் நிலையில், பணமில்லா பரிவர்த்தனையையும் ஊக்குவித்து வருகிறது.

பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் ஸ்வைப் மெசின்கள் மூலம் தங்களது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த இன்டர்நெட் அவசியமாக உள்ளதால், டிராய் நிறுவனம் மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

அதன்படி கிராமப்புற வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மாதந்தோறும் 100 எம்பி அளவுக்கு இலவச இன்டர்நெட் டேட்டா வழங்க வேண்டும் என்றும், இதன்மூலம் 5 கோடி கிராமப்புற மக்கள் பயன்பெறுவார்கள் என்று டிராய் தெரிவித்துள்ளது,

கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்டர்நெட் டேட்டா வழங்குவதன் மூலம் பணமில்லா பரிவர்த்தனையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும்,அவர்களது பொருளாதாரத்தை உயர்த்தவும் முடியும் என்றும் டிராய் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது,

PREV
click me!

Recommended Stories

சுதந்திரத்திற்க்குப் பின் 8 முதலமைச்சர்களை மட்டுமே கண்ட மாநிலம் எது தெரியுமா? அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.!
Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? ராத்திரியில மட்டும் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!