
நாளை முதல் அனைத்து ஏடிஎம்களிலும் தினமும் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
நாளை முதல் அனைத்து வங்கி ஏடிஎம்களிலும், ரூ.4,500 வரை எடுக்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்ததுபோல், வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். அந்த கட்டுப்பாட்டை தளர்த்தவில்லை என தெரிவித்துள்ளது.
ஏடிஎம்மில் இருந்து ஒரு டெபிட் கார்டு மூலம் தினமும் ரூ.2,500 வரை எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, ரூ.4,500 எடுக்க அனுமதிக்கப்படுகிறது. நாளை முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது. வங்கிகளில் வாரத்துக்கு எடுக்கப்படும் ரூ.24,000, புதிய 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும்.