Petrol diesel price today: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை சதத்தை விட்டு குறையாமல் விற்பனையானது. அந்த வகையில்,கடந்த 45-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனையானது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.22 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 6.70 ரூபாயும் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : சர்ச்சையில் சிக்கிய லியோனி..முட்டுக்கட்டை போடும் பாஜக.. விரைவில் கைதா ? பரபரப்பு !
இதையும் படிங்க : Schools Reopen : தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு - எப்போது தெரியுமா..?