
திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது.
தற்போது கொரோனா பரவல் மேலும் குறைந்துள்ளதையடுத்து, இன்று காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.