வருமான வரித்தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5 வரை கால அவகாசம்...!!!

First Published Jul 31, 2017, 3:53 PM IST
Highlights
Time for tax returns till August 5


வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய இந்த மாதம் 31 ஆம் தேதியே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு செய்யப்படும் என்ற தகவலையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் முதலில் மறுத்து வந்தது.

ஆதலால் வரி செலுத்துபவர்கள் அனைவரும் உரிய ஆவணங்களை, விதிமுறைப்படி தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

இம்மாத தொடக்கத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வருமான வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கவும், புகார்களை தெரிவிக்கவும், ஆன்ட்ராய்ட செல்போனில் செயல்படும், மொபைல் ஆப்ஸ் ‘ஆயக்கர் சேது’ என்ற செயலியை அறிமுகம் செய்தார்.

இந்த செயலி மூலம் வருமான வரி செலுத்துபவர்கள் விவரங்களைத் தெரிவிக்கும் போது, அதிகாரிகளை நேரடியாக சந்திக்கும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும். ஊழல், கையூட்டு பெறுவதும் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய இம்மாதம் 31 ஆம் தேதிதான் கடைசி நாள் என தெரிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

click me!