பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் இந்தியா உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாறியுள்ளதற்கு பெகாட்ரான் ஆலை மற்றொரு மைல்கல் என மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் இந்தியா உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாறியுள்ளதற்கு பெகாட்ரான் ஆலை மற்றொரு மைல்கல் என மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாற்ற எண்ணும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்திற்கு தமிழ்நாட்டின் செங்கல்பட்டு அருகே அமையும் பெகாட்ரான் மொபைல் தயாரிப்பு தொழிற்சாலை மற்றொரு மைல்கல்லாகும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். செங்கல்பட்டில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை தைவான் நாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் மத்திய அரசின் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் (பிஎல்ஐ) கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: அமைச்சர்களின் ஆணவப் பேச்சால்.. திமுகவுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என மக்கள் சிந்திக்கிறாங்க.. டிடிவி.தினகரன்.!
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், பிஎல்ஐ மூலம் ஏராளமான நிறுவனங்கள் நம்மிடம் முதலீடு செய்ய முன்வந்துள்ளன என்றும், இந்த திட்டத்தினால் ரூ 6500 கோடி முதலீடு வந்துள்ளது என்றும், இதனால் 40,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
2015-இல் மொபைல் போன்கள் ஏற்றுமதி பூஜ்யத்தில் இருந்தது என்று கூறிய அவர், இன்று ஏற்றுமதியில் சுமார் ரூ.50,000 கோடியை எட்டியுள்ளோம். என்றார். மொபைல் போன்களின் இறக்குமதியை பெரிதும் நம்பியிருந்த நிலை மாறி இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் 97 சதவீதம் உள்நாட்டில் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்: பயணிகளுக்கான பிரத்யேக இதழை அறிமுகம் செய்தது தென்னக ரயில்வே
இந்த நிலைக்கு பிரதமர் திரு மோடியின் பிஎம்பி மற்றும் பிஎல்ஐ திட்டங்களினால் அடைந்த வெற்றியாகும் என அவர் கூறினார்.
“கொரோனா பெருந்தொற்றால் உலகப் பொருளாதாரமே தடுமாறிய நிலையில், அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக அமைந்தது. ஆனால் இந்தியா அதை சமாளித்த விதத்தினால் உலக நாடுகள் நம்மை பிரமிப்புடனும், மரியாதையுடனும் பார்க்கின்றன” என்று திரு ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டுக்குள் கொரோனா தொற்றை முழுவதுமாக வென்று விடுவோம் என்று கூறிய அவர், மேலும் 2026 ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய உறுதிபூண்டுள்ளோம் என்றார்.
"மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்" என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பயணித்து அந்த இலக்கினை அடைய மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் தொழில் தொடங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பெகாட்ரான் டெக்னாலஜியின் இந்தியா தலைவர் திரு செங் ஜியான் ஜாங், இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் வழங்கிய ஆதரவால், பெகாட்ரான் இந்தியாவில் அமைகிறது என்றும், இதனால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், ,பெகாட்ரான் டெக்னாலஜி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திரு. லின் சியு டான், பெகாட்ரான் கார்ப்பரேஷன் மூத்த துணைத் தலைவர் திருமதி. டெனிஸ் யாவ், பெகாட்ரான் டெக்னாலஜி இந்தியாவின் திரு.ஷிங் ஜங் சியோ ஆகியோர் கலந்து கொண்டனர்.