புல்வாமாவில் இன்ஷா சபீரின் கனவை நனவாக்கிய மத்திய அரசின் கிராமப்புற வாழ்வாதார இயக்கம்

Published : Dec 28, 2023, 07:25 PM ISTUpdated : Dec 28, 2023, 08:24 PM IST
புல்வாமாவில் இன்ஷா சபீரின் கனவை நனவாக்கிய மத்திய அரசின் கிராமப்புற வாழ்வாதார இயக்கம்

சுருக்கம்

மத்திய அரசின் தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா மூலம் கிடைத்த உதவியால் புல்வாமாவின் ஆரிகாம் கிராமத்தைச் சேர்ந்த இன்ஷா ஷபீர் ஒரு பொட்டிக்கை தொடங்கி நிர்வகித்து வருகிறார்.

மத்திய அரசின் தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா என்ற தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பல பயனாளிகளில் ஒருவர் ஜம்மு & காஷ்மீரைச் இன்ஷா ஷபீர். புல்வாமாவின் ஆரிகாமில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் ஒரு பொட்டிக்கை தொடங்கி நிர்வகித்து வருகிறார்.

மத்திய அரசின் விகாசித் பாரத் சங்கல்ப் யாத்ராவின்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இன்ஷா, 2017ஆம் ஆண்டு தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் பற்றி முதலில் கேள்விப்பட்டதாகவும் உடனடியாக அதில் பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

இத்திட்டம் 2011இல் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இது கிராமப்புற ஏழை எளிய மக்ககளுக்கு சுயதொழில் தொடங்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தனது கதையைப் பகிர்ந்துகொண்ட இன்ஷா, சிறுவயதிலிருந்தே தனக்கு ஆடைகளை வடிவமைப்பதிலும் தையலிலும் ஆர்வம் இருந்தது என்றும் தேசிய ஊரக வாழ்வாதர இயக்கத்தின் கீழ் உள்ளூர் தையல் பள்ளியில் சேர்ந்ததுதான் தனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்றும் சொல்கிறார். அவருடைய திறமையும் ஆர்வமும் வருவாய்க்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது என்கிறார்.

தையல் படிப்பை முடித்த பிறகு, இன்ஷா சொந்தமாக பொட்டிக் தொடங்க முடிவு செய்தார். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திலும் பதிவு செய்தார். அப்போது தேசிய ஊரக வாழ்வாதர இயக்கத்தின் கீழ் அவருக்கு நிதி உதவி கிடைத்தது. அதன் மூலம் அவர் தனது பொட்டிக்கை ஆரம்பித்தார்.

தேசிய ஊரக வாழ்வாதர இயக்கத்தின் கடன் பெறாமல் இருந்திருந்தால், தன்னால் தொழில் தொடங்க முடியாமல் போயிருக்கலாம் என்ற இன்ஷா, இளைஞர்களுக்கு உதவும் புதிய இந்தியாவின் திட்டங்களைப் பாராட்டி இருக்கிறார்.

"இன்று, பணக்காரர்கள் மட்டுமல்ல, எளிமையான வாழ்க்கைப் பின்னணி கொண்ட, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் வெற்றிகரமாக தொழில் தொடங்குகிறார்கள். பொருளாதார சுதந்திரம் வழங்கும் இதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவந்ததற்காக அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறேன்" என்று இன்ஷா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். இன்ஷா தனது தொழிலை நிர்வகிப்பது மட்டுமின்றி மற்ற பெண்களுக்கும் தனது பொட்டிக்கில் வேலைவாய்ப்பு அளித்து வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!