கேரளாவில் நடந்த மனதை உருக வைக்கும் சம்பவம்... நாய்களை காப்பாற்றிய பெண்!

By sathish kFirst Published Aug 19, 2018, 1:47 PM IST
Highlights

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது  மனதை உருக வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த 8ஆம் தேதியிலிருந்து அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள எல்லா அணைகளும் நிரம்பி வழிகின்றன. பெருமழையால் 14 மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

223139 மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5.91 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள், தோட்டங்கள், சுமார் 1,513 ஹெக்டர் அளவிலான விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன.  ஆடு மாடுகள் என கால்நடைகள் அதிகமாக உயிரிழந்துள்ளது. ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

தேசியப் பேரிடர் மீட்புப் படை, விமானப் படை, கடற்படை, ராணுவம், தீயணைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், கேரளாவின் திருச்சூரில்  உள்ள வீடுகளில்  25 நாய்கள் மீட்கப்பட்டது பெரும் பார்ப்பவர்களை கலங்கச் செய்துள்ளது.  கேரளாவின் திருச்சூர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு  மீட்பு பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது  மனதை உருக வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.   அங்கு திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட சுனிதா என்ற பெண் யாரும் மீட்க வர மாட்டார்களா என உதவி தேடி தனது வீட்டில் இருந்தார்.  சுனிதாவுக்கு பயம். திடீரென குரல் கேட்கிறது. யாரேனும் இருக்கிறீர்களா என தொடர்ந்து குரல் கேட்க, சுனிதா பதில் கொடுக்கிறார். கிளம்புங்கள் செல்லலாம், தண்ணீர் உங்கள் வீடு முழுவதும் சூழ்ந்துவிடும் என மீட்க வந்தவர்கள் அவசரப்படுத்துகிறார்கள், ஆனால் சுனிதா வர அடம்பிடித்துள்ளார். அப்போது மீட்புப் பணியினர் காரணத்தைக் கேட்க ஒரு அறையில் சாக்குகளை கொண்டு போர்த்தி பாதுகாக்கப்பட்ட 25 நாய்களை காட்டுகிறார் சுனிதா. 

மீட்க வந்தவர்களோ இப்போது நாய்களை எல்லாம் மீட்க  முடியாது, நீங்கள் மட்டும் வாங்க, விலங்கு அமைப்புகளிடம் உடனடியாக சொல்லி மீட்க சொல்லலாம் என சொல்லவே சுனிதாவோ அவரகளை அனுப்பி விட்டு, நாய்களோடு தங்குவது என முடிவெடுத்து விடுகிறார். நாய்களை மீட்க ஆட்களை அனுப்புங்கள் என சொன்னார். வந்தவர்கள்  திரும்பிச் சென்றதும்.  சுனிதாவின் வீட்டில் தண்ணீர் புக ஆரம்பித்தது. தடுப்புகளை வைத்தும் , கதவுகளை பூட்டியும் தடுக்க பார்த்தார். ஒருவழியாக சுனிதாவின் கோரிக்கை கேரளாவின் உள்ள விலங்குகள் நல அமைப்புக்கு சென்றது. அனைத்து நாய்களையும் மீட்க ஆள் அனுப்பினார்கள். படகுகள் வந்தது. 25 நாய்களோடு சுனிதா பத்திரமாக மீட்கப்பட்டார். மேலும், வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட 2 நாய்களையும் கூட மீட்டு , தனது வீட்டில் சேர்த்துக் கொண்டாராம். 

click me!