
பிரதமர் மோடியின் பக்கோடா பேச்சின் எதிரொலியால் கூகுளில் கடந்த வாரம் பகோடா என்ற சொல் அதிக அளவில் தேடப்பட்டுள்ளதாகவும் அதில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி சாலையில் சிலர் பகோடா விற்பதாக கூறி விளக்கமளித்தார்.
இதனை கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் மோடி செல்லும் இடங்களில் பகோடா செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமராகும்போது, பகோடா விற்பவரின் மகன் ஏன் தொழிலதிபராக வரக்கூடாது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா பேசினார்.
பகோடா விற்பதை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்களை விமர்ச்சித்த அவர், வேலை இல்லாமல் இருப்பதற்கு பகோடா விற்பது சிறப்பான பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பக்கோடா பேச்சின் எதிரொலியால் கூகுளில் கடந்த வாரம் பகோடா என்ற சொல் அதிக அளவில் தேடப்பட்டுள்ளதாகவும் அதில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.