Aadhaar card : ஆதார் நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் கார்டு
இந்தியாவில் அனைவருக்குமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது. பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய உலக அளவில் மிகப்பெரிய அடையாள அட்டை அமைப்பாக ஆதார் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஆதார் அட்டையை பலர் எதிர்த்து வந்தாலும், 2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆதார் செல்லும் என்று அறிவித்தது. இது தனிப்பட்ட தகவல்களை கொண்டு இருக்கும், ஏமாற்ற முடியாத அடையாள அட்டை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியது. மிக முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது. இந்த நிலையில் பல்வேறு சேவைகளை வழங்க ஆதார் கட்டாயம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் தனியார் நிறுவனங்கள் பல அடையாள அட்டையாக ஆதார் அட்டைகளை கேட்டு வருகிறது.
மத்திய அரசு எச்சரிக்கை
இந்நிலையில் ஆதார் நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எங்கும், எதற்கும் ஆதார் ஒரிஜினலின் நகலை தர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதை முறைகேடாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சான்றுக்கு ஆதார் ஜெராக்ஸ் தர வேண்டிய தேவை எழுந்தால் ஆதார் இணையதளத்தில் மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்து அதை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்டு ஆதாரில் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே காட்டும். எனவே ஆதார் கார்டை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு தடுக்கப்படும். மேலும் பொது இடங்களில் உள்ள கணினிகளில் ஆதார் தரவிறக்கம் செய்தல் போன்றவற்றையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ராமதாஸ், அன்புமணி செஞ்ச துரோகம்..வன்னிய சமூகம் சும்மா விடாது - காடுவெட்டி குரு மகள் ஆவேசம் !
இதையும் படிங்க : அடங்காத ஆளுங்கட்சி.. சாட்டையை எடுத்த எடப்பாடி பழனிசாமி.. போராட்டத்தில் குதிக்கும் அதிமுக !