எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறீர்களா? - கவனம்… இதை மறக்காமல் படிச்சுடுங்க….

First Published Dec 27, 2017, 4:09 PM IST
Highlights
The check book of the seven banks that have recently joined SBI bank has been announced after the 31st of this month.


ஸ்ேடட் பேங்க் ஆப் இந்தியா(எஸ்.பி.ஐ.) வங்கியோடு சமீபத்தில் இணைந்த 7 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வைத்து இருக்கும் காசோலை புத்தகம்(செக்-புக்) இந்த மாதம் 31-ந்தேதிக்கு பின் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக எஸ்.பி.ஐ. வங்கியின் புதிய காசோலை புத்தகத்தை வங்கியில் சென்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தி், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ராய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப்திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவை நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்.பி.ஐ. யோடுஇணைக்கப்பட்டன.

இந்த வங்கிகள் இணைக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து அந்த வங்கிகளின் காசோலை புத்தகத்தையே அந்த வங்கிகளில் கணக்கு வைத்து இருந்த வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த காசோலை புத்தகத்தை ஸ்டேட் வங்கியில் கொடுத்து, புதிய எஸ்.பி.ஐ. வங்கி காசோலை புத்தகத்தை மாற்றிக்கொள்ள  செப்டம்பர் மாதம் 30 முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை அந்த அவகாசம் தரப்பட்டு இருந்தது. இந்த கெடு வரும் 31-ந்தேதியோடு முடிகிறது.

அதன்பின் இந்த 6 வங்கிகளின் காசோலை புத்தகம் மூலம் செய்யப்படும் பரிமாற்றம் அனைத்தும் செல்லாது  என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து எஸ்.பி.ஐ. வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது “ ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை வங்கியில் கணக்கு வைத்து இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் விரைவாக தங்களின் பழைய காசோலை புத்தகத்தை வங்கியில் கொடுத்து, புதிய ஐ.எப்.எஸ்.சி. எண் பதிவு செய்யப்பட்ட காசோலை புத்தகத்தை விரைவாக பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பழைய காசோலை புத்தகத்தை மாற்றிக்கொள்ள இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாளாகும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் எஸ்.பி.ஐ. வங்கி, தன்னுடன் இணைந்த துணை வங்கிகளின் 1300 கிளைகளின் பெயர்களையும், ஐ.எப்.எஸ்.சி. எண்களையும் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

click me!