உலகம் முழுவதும் ஜெ.என். 1 வகை கொரோனா பரவலுக்கு தடுப்பூசி அவசியமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
2019ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கெரோனா வைரஸ் தொற்றால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டன. 2 ஆண்டுகளில் கொரோனா உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்ற நிலையில், தற்போது வரை பல்வேறு திரிபுகளுடன் வைரஸ் தொற்று இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது உலகின் பல நாடுகளிலும் ஜெ.என். 1 வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப் போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
புதியவகை கொரோனா தொற்று பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜெ.என். 1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை.
குளிர்காலம் என்பதால் ஜெ.என். 1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் வீரியம் குறைவு தான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.