பெங்களூருவில் பயங்கர ’நில அதிர்வு’... பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 20, 2019, 3:04 PM IST
Highlights

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.  

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.  

பெங்களூருவின் பிரதான பகுதிகளான கோரமங்களா, ஜெய நகர், எம்.ஜி ரோடு, எலக்ட்ரானிக் சிட்டி, இந்திராநகர், அலசூர், ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட், பன்னர் கட்டா ரோடு ஆகிய இடங்களில் நிலநடுக்கம் போன்றே நில அதிர்வு காணப்பட்டுள்ளது.

மதியம் 2 மணி 55 நிமிடத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டதால் அலுவலகங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் அலறியடித்து கொண்டு சாலைகளுக்கு ஓடி வந்து குவிந்தனர். 

ஏற்கெனவே தமிழகத்தில் வாணியம்பாடி அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலையில் மெட்ரோபாலிட்டன் சிட்டியான பெங்களூருவில் கடுமையான நில அதிர்வால் கர்நாடகா மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாளாகி உள்ளனர். நில அதிர்வு ஆய்வு மையம் எத்தனை ரிக்டர் அளவுகோளில் இந்த நில அதிர்வு இருந்தது என்பதை விரைவில் அறிவிக்க உள்ளது. 

click me!