கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே கணவன் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை… உயர்சாதிப் பெண்ணை மணந்ததால் கொடூரம்!!

Published : Sep 14, 2018, 10:08 PM ISTUpdated : Sep 19, 2018, 09:26 AM IST
கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே கணவன் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை… உயர்சாதிப் பெண்ணை மணந்ததால் கொடூரம்!!

சுருக்கம்

தெலங்கானா மாநிலம் நலகொண்டா அருகே கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே கணவனை மர்ம நபர் ஒருவர்  கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.. கணவனை காப்பாற்றச் சொல்லி அந்தப் பெண் கதறி அழுதது அனைவரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த ப்ரனய் பெருமல்லா. எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த இவர் உயர்சாதி பெண்ணான  அம்ருதா என்பவரை காதலித்து  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்துக்கு அம்ருதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் அந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.. இந்நிலையில் அம்ருதா கர்ப்பமானார்.  ப்ரனய் பெருமல்லா தன்னுடைய மனைவி அம்ருதாவுடன் அங்குள்ள ஜோதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அம்ருதா மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதால்  அவரை பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது அடையாளம் தெரியாத மர்ம நபர், பெருமல்லாவை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன்பே மர்மநபர், பெருமல்லாவை வெட்டிக் கொலை செய்துள்ளார். அருகிலிருந்தவர்களின் உதவியை கோரும் அம்ருதா, மருத்துவமனைக்குள் வேகமாக ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமல்லா எஸ்.சி. பிரிவை சேர்ந்தவர் என்பதால்  அம்ருதாவின் பொற்றோரோ அல்லது அவரது உறவினர்களோ ஆணவக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களறியான காதல் திருமணம்.. சண்டையில் மணமகனின் மூக்கை அறுத்த பெண் வீட்டார்!
Ola–Uber-க்கு டஃப் போட்டி.. மத்திய அரசின் பாரத் டாக்ஸி.. பயணிகளுக்கு குறைந்த கட்டணம்!