இந்திய வானிலை மைய அதிகாரியை வெளுத்து வாங்கிய தமிழ்நாடு வெதர்மேன்

By Selvanayagam PFirst Published Sep 26, 2019, 11:02 PM IST
Highlights

தான் எழுதும் வானிலை அறிக்கையில் பயன்படுத்தும் வார்த்தைகள் அறிவியலுக்கு புறப்பாக இருப்பதாகவும் அவ்வாறு எழுதக்கூடாது என்று பேசிய இந்திய வானிலை அதிகாரி ஒருவரை தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளுத்துவாங்கியுள்ளார்

தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பிரதீப் ஜான் என்பவர் மழை குறி்த்த செய்திகளை எழுதி வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாலும், பிரதீப் ஜான் மழை குறித்த தகவல்கள், புயல்கள், காலநிலை மாற்றம், வெயில், உள்ளிட் பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுக்கு துல்லியமாக தகவல்களை வழங்கி வருகிறார்.
 
எந்தவிதமான பிரதிபலன் இன்றி, வணிக நோக்கம் இன்றி, யாரிடமும் கையூட்டு பெறாமல் முற்றிலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றநோக்கத்தோடு தன்னுடைய பணி நேரம் தவிர்த்து இந்த பணியை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வருகிறார்.


 
2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியபோதுதான் பிரதீப் ஜானின் சேவை, மக்களுக்கு தெரியத் தொடங்கியது. இவர் வெளியிட்ட தகவல்கள், எந்தெந்த நேரத்தில் மழை பெய்யும், எத்தனை நாள் நீடிக்கும், மழை எவ்வளவு நேரம் நீடிக்கும் என்ற தகவல்களை மிகத்துல்லியமாக வழங்கினார். இவரின் செயலாலும், தகவல்களாலும் நம்பிக்கை கொண்ட மக்கள் ஆர்வலமாக பேஸ்புக்கில் பின்தொடரத் தொடங்கினார்கள். தற்போதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் தமிழ்நாடு வெதர்மேனுக்கு இருக்கிறார்கள்.


 
பிரதீப் ஜானின் தகவல்கள் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் எளிமையான மொழியில், விளக்கமாக இருப்பதால் மழை குறித்து எளிய ஆங்கில அறிவு இருப்போரும் அறிந்து கொள்ள முடியும். இவரின் கணிப்புகள் பெரும்பாலான நேரங்களில் தவறுவதில்லை என்பதால் மக்கள் மத்தியில் பிரதீப் ஜானுக்கு தனிமரியாதை உண்டு.

இந்நிலையில் இந்திய வானிலை மையத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஒருவர் அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவர் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் மழை குறித்து எழுதும் வார்த்தைகளில் ரெட் தக்காளி, டமால் டுமீல் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது இது அறிவியலுக்கு புறம்பானது, பரபரப்பை ஏற்படுத்தும். அவ்வாறு எழுதக்கூடாது என்று பேசியுள்ளார்.

இந்திய வானிலை அதிகாரி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் “ நான்  எழுதியதில் என்ன தவறு இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக 200 முதல் 300 அழைப்புகள் பல்ேவறு ஊடகங்களில் இருந்து வந்தபோதிலும் நான் எடுத்துப்பேசவில்லை. ஏனென்றால் நான் தனியாக செயல்பட விரும்புகிறேன். நான் புகழுக்காக எழுதவில்லை, இந்த பேஸ்புக் பக்கம் எனக்கு சாபமாகவும, ஆசிர்வாதமாகவும் இருக்கிறது. இதில் நான் தொடர்ந்து எழுதுவதால் என்னுடைய உடல்நலம், மன அமைதி, நேரம், குடும்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இழந்திருக்கிறேன். என்னை உங்களுக்குத் தெரியுமா, என்னை பற்றி தீர்மானத்துக்கும் வராதீர்கள். உங்கள் பணியை மட்டும் பாருங்கள்
 
நான் இந்திய வானிலை மையத்தின் எந்த பணிக்கும் குறுக்கே வந்ததில்லை. இந்திய வானிலை மையம் தவறாக தகவல் தெரிவித்துவிட்டது என்று ஒருமுறை கூட இதுவரை நான் பேசியது இல்லை. என்னுடைய பல நேர்காணல்களில் இந்திய வானிலை ைமயம் அறிவிப்புதான் சிறந்தது, அதிகாரப்பூர்வமானது துல்லியமானது என்று ஆதரவாகத்தான் இருந்திருக்கிறேன்.

ஆனால், என்னுடை பேஸ்புக் பக்கத்தில் எனக்கு பிடித்த வார்த்தைகளில் எழுதுவது என்னுடைய விருப்பம். அதில் நீங்கள் தலையிட வேண்டாம். தவறு கண்டுபிடித்தால், ஐஎம்டி தகவலிலும் என்னால் தவறு கண்டுபிடிக்க முடியும்

அதிகாரிகளின்  அதிகாரவரம்பு என்ன எனத்தெரியும். மற்றவர்களை குற்றம்சாட்டும் முன்பு 3 விரல்கள் உங்களை நோக்கித் திரும்பும். ப்ளூ தக்காளி, யெல்லோ தக்காளி, டும் டாம் டுமீல், பின்னி பெடல எடுக்குது, டிஷ் டியியூன் டம், இன்னும் புதுபுது வார்த்தைகளில் எழுதுவேன். என்னுடைய விருப்பம். இது என்னுடைய உணர்வுகள், மழை குறித்த தகவல்களை எழுதுவதும், மக்களுக்கு தருவதும் என்னுடைய உணர்வோடு தொடர்புடையது.

நீங்கள் பணம் பெற்று ஒரு ஊழியராக பணியாற்றுகிறீர்கள். ஆனால், நான் அப்படி அல்ல, மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில், மக்களை பதற்றம் அடையச் செய்யாமல், தேவையான தகவல்களை மட்டும் தருகிறேன். உங்களுடைய பணியில் குறுக்கிடவில்லை.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளா்ா

click me!