ஓட்டலில் ஸ்ரீதேவி பொம்மை! வைரலாகும் புகைப்படம்!

 
Published : Mar 12, 2018, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
ஓட்டலில் ஸ்ரீதேவி பொம்மை! வைரலாகும் புகைப்படம்!

சுருக்கம்

sridevi doll installed in restaurant in singapore

சிங்கப்பூரில் ஓட்டல் நடத்தி வரும் ஒரு தம்பதியினர், நடிகை ஸ்ரீதேவியின் உருவில் ஒரு பொம்மை செய்து வைத்துள்ளனர். ஸ்ரீதேவியின் அந்த பொம்மை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார்.  திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது ஸ்ரீதேவி மரணமடைந்தார்.

ஸ்ரீதேவியின் மரணத்துக்கு காரணம், மாரடைப்பு என்று முதலில் கூறப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு, அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும், அதனால் மயங்கி தவறுதலாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்துகட்ட விசாரணைக்குப் பிறகு, பிப்ரரவரி
மாதம் 27 ஆம் தேதி ஸ்ரீதேவியின் உடல், இந்தியா கொண்டு வரப்பட்டது.

தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. இதன் பின்னர், மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாலிவுட் மட்டுமல்லாது, தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் மும்பை வில்லேபார்லே மயானத்தில் அரசு மரியாதை உடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவியிக்கு 16 ஆம் நாள் சடங்கு நேற்று சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் ஓட்டல் நடத்தி வரும் ஒரு தம்பதியினர் நடிகை ஸ்ரீதேவியின் உருவில் ஒரு பொம்மை செய்து உள்ளனர். அந்த பொம்மை புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

ரூ.1 லட்சத்துக்கு காண்டம், ரூ.4 லட்சத்துக்கு நூடுல்ஸ்.. 2025ல் இந்தியர்கள் செய்த வினோத ஆர்டர்கள்!
அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்!