எதற்காக? ஏன்? எப்படி? ஸ்ரீதேவி கணவரை உலுக்கி எடுக்கும் துபாய் டாக்டர்கள்... விடை தெரியாத பல்வேறு கேள்விகள்

First Published Feb 27, 2018, 11:29 AM IST
Highlights
Sridevi death Cops check call logs question hotel staff and family


துபாயில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்த ஸ்ரீதேவி. அங்கே, Jumeirah Emirates Towers என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது ஹோட்டல் பாத்ரூமுக்கு சென்று முகம் கழுவி வருவதாக ஸ்ரீதேவி கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அளவுக்கு அதிகமான மதுபோதையில் குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் 15 நிமிடம் உயிருக்கு போராடி மரணித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் இந்த மரண செய்தி இந்திய திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தற்போது ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான துபாய் தடயவியல் அறிக்கையை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கைகள் எழுப்பும் விடை தெரியாத கேள்விகளும் அடங்கியிருக்கிறது.

அந்த அறிக்கையில் ரத்த மாதிரிகளில் ஆல்கஹால் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் இதயம் நின்று போனதால் ஸ்ரீதேவி உயிர் பிரிந்தது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் குளியல் அறைக்கு ஸ்ரீதேவி சென்றிருக்கிறார். அப்போது அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் போதையில் இருந்துள்ளார். முகம் கழுவ பாத்ரூமுக்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் குளியல் தொட்டியில் தவறி விழுந்திருக்கிறார். குளியல் தொட்டியில் தவறி விழுந்த அவர் எழுந்திருக்க முடியவில்லை. ஆனாலும் எழுவதற்காக 15 நிமிடம் போராடியிருக்கிறார். குளியல் தொட்டியில் நீரில் மூழ்கிய நிலையில் அப்படியே மரணித்துவிட்டார் ஸ்ரீதேவி என்கிறது துபாய் தடவியல் அறிக்கை.

இந்த 15 நிமிடத்துக்குப் பின்னரே ஹோட்டல் ஊழியர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார் கணவர் போனி கபூர். அப்போது குளியல் தொட்டிக்குள் குப்புற விழுந்து மூழ்கி இதய பாதிப்பால் இறந்துவிட்டார். இதுதான் ஊடகங்களுக்கு சொல்லப்பட்ட செய்தி.

இந்த நிலையில், ஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதும், மாரடைப்பு இல்லை என்ற தகவலும் உடல் கூறு மற்றும் தடயவியல் சோதனைகளின் முடிவில் தெரியவந்துள்ளது.

தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்யவில்லை என்பதை உறுதி செய்யும்விதமாக, இதில் குற்றவியல் நோக்கம் இல்லை என்ற தகவலையும் தடயவியல் அறிக்கை சொல்கிறது. அவர் உயிர் பிரிவதற்கு முன்பே முன்பாக, மது போதையில் இருந்துள்ளார். எனவே போதையில் முகம் கழுவ சென்றபோது தடுமாறி பாத்டப்புக்குள் அவர் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. குப்புற விழுந்திருக்கலாம், போதையில் அவரால் எழுந்திருக்க முடியாமல் மூச்சு திணறி பலியாகியிருக்கலாம் என தெரிகிறது.

இப்படி சொல்லும் அதே மருத்துவர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைக்கிறார்கள்.

நட்சத்திர ஹோட்டலான Jumeirah Emirates Towers-ல் பாத்ரூம் மிகவும் பெரிதாக இருந்திருக்க வேண்டும்.

முகம் கழுவும் வாஷ் பேஷினுக்கும், பாத்-டப்புக்கும் நடுவே தூரம் இருந்திருக்க வேண்டும்.

பிறகு எப்படி பாத்-டப்பில் தவறி விழுந்திருப்பார்?

போனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக் கொண்டு சென்றபோது மாலை 6.25 மணி என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து துபாயைச் சேர்ந்த நண்பரின் அறிவுரைக்கு பிறகு இரவு 9 மணிக்குத்தான் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். ஏன் இந்த தாமதம்?. போனிகபூர் இதுபோன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஓட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை?  ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்பதை யார், எதற்காக கூறினார்கள்?

நிதானம் இல்லாத அளவிற்கு மது அருந்தி இருந்தவரை அதுவும் பிரபல நடிகை இந்த நிலையில் வெளியே செல்ல ஒப்புகொண்டிருப்பாரா ?

அளவிற்கு மது போதையில் இருந்தது தெரிந்தும் அவரை ஏன் போனி கபூர் வெளியே செல்ல அழைத்தார்?

பாத்ரூம் டப்பில் ஸ்ரீதேவி விழுந்திருந்தால் உடனடியாக அலறல் சிறு சத்தமாவது கேட்டிருக்குமே

அப்படி சத்தம் கேட்டு உடனடியாக கதவை உடைத்து பார்க்காமல் 15 நிமிடங்கள் வரை காத்திருந்தது எதற்காக?

ஸ்ரீதேவி வெளியே செல்ல புறப்படத் தான் குளியல் அறையில் முகம் கழுவ சென்றார் என்றால் பாத் டப்பில் முன்கூட்டியே தண்ணீர் இருந்தது எப்படி?

பொதுவாக பாத்டப்பில் குளிப்பதற்கு சில நிமிடங்கள் முன்னரே தண்ணீர் நிரப்பப்படும் ஆனால் பாத்டப்பில் தண்ணீர் ரெடிமேடாக நிரப்பி வைக்கப்பட்டதன் மர்மமும் என்ன?

மருத்துவர்களின் கேள்விக்கு மாறாக ஹோட்டல் வெப்சைட்டில் பாத்ரூம் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், முகம் கழுவும் இடமும், பாத்-டப்பும் அருகிலேயே இருப்பது உறுதியாகியுள்ளது.

போதையில் தவறி விழுந்தே இறந்திருக்க கூடும் என்பதே சந்தேகம்.
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக விடை தெரியாத பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

click me!