ரோல்மாடலாக இருக்கப்போகும் உங்களைப் போன்ற ஒரு வீரனை இந்தியா இழக்காது... ரியல் ஹீரோவான அபிநந்தன்!!

By sathish kFirst Published Feb 28, 2019, 5:34 PM IST
Highlights

அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் எண்ணற்ற மகிழ்ச்சியான செய்தியை கேட்ட இந்திய மக்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதேபோல அபிநந்தனை நினைத்து பெருமைப்படுவதாக பதிவிட்டு வருகின்றனர். "எண்ணற்ற போர் வீரர்களுக்கு ரோல்மாடலாக இருக்கப்போகும் உங்களைப் போன்ற ஒரு வீரனை இந்தியா இழக்காது" என பதிவிட்டுள்ளார்.

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார்.  அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்படுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

அபிநந்தனை  இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பல்வேறு சர்வதேச நாடுகளும் களம் இறங்கியிருந்தன. அபிநந்தனை விடுவிக்குமாறு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தன. இது குறித்து அமெரிக்க தூதரிடம் விரைவில் அபிநந்தனை விடுவிப்போம் என பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் கூட பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த பேச்சு வார்த்தைக்கு முன்பாக இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய செய்தியை கூறியுள்ளார் இம்ரான் கான்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்ட இந்திய மக்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதேபோல அபிநந்தனை நினைத்து பெருமைப்படுவதாக பதிவிட்டு வருகின்றனர். "எண்ணற்ற போர் வீரர்களுக்கு ரோல்மாடலாக இருக்கப்போகும் உங்களைப் போன்ற ஒரு வீரனை இந்தியா இழக்காது" என பதிவிட்டுள்ளார்.

அதில், "விங் கமாண்டர் அபிநந்தனை நினைத்தால் பிரமிப்பாகவும், ஆச்சிரியமாகவும் அதே சமயம் பெருமையாகவும் இருக்கிறது. 

தனது போர்விமானம் கோளாறு ஏற்பட்டதும் பாராசூட் மூலம் நிலத்தில் குதித்துள்ளார். தரையிறங்கிய இடம் இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்று அவருக்கு சந்தேகம்.  இதற்குள் விமானி விழுந்த செய்தி கேட்டு ஊரில் உள்ள இளைஞர்கள் கூடிவிட்டனர். கூட்டத்தில் உள்ள இளைஞர் ஒருவரிடம் " இந்த இடம் இந்தியாவா" என்று கேட்க, அவரும் " ஆம், இந்தியா தான்" என்று யாரோ ஒருவர் பதில் சொல்லியிருக்கிறார். 

இதற்கு பிறகு சில வாக்கியங்களைச் சொல்லி, தான் யார் என்பதை தெரிவித்து, "முதுகுப் பகுதியில் அடிப்பட்டிருக்கிறது ; குடிக்க தண்ணீர் வேண்டும்" என்று கேட்டிருக்கிறார்.  இதற்கிடையில், இந்தியாவைப் பற்றிய வாசகங்களை கேட்ட இளைஞர் ஒருவர் "பாகிஸ்தான் ராணுவம் வாழ்க" என்று எதிர்ப்பு கோஷம்போட, என்ன செய்வது என்று தெரியாமல் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டிருக்கிறார். 

அபினந்தனின், துப்பாக்கி சூட்டை எதிர்பாக்காத உள்ளூர் இளைஞர்கள் கைகளில் கல்லை எடுத்துள்ளனர். கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டே கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் பின்நோக்கியே சென்றுள்ளார்.  ஒரு கட்டத்தில், அங்கிருந்த குளத்தில் குதித்து, தன் கையில் இருக்கும் ஆவணங்களை அழித்துள்ளார். இதற்கு பிறகு, உள்ளூர் இளைஞர்களிடம் பிடிப்படுகிறார். ஆத்திரத்தில் சிலர் தாக்க ஆரம்பிக்க, பலர் தடுத்துள்ளனர்.  

இறுதியாக, ராணுவம் வர, அபிநந்தன் அவர்களிடம் ஒப்படைக்கப்பபடுகிறார்.  எந்த இடம் என்று தெரியாமல், எதிரி நாட்டில் சிக்கிக்கொண்ட போதிலும், ஒப்பற்ற வீரத்துடன், மிகுந்த புத்திசாலித்தனமாக செயல்பட்டு, ஆவணங்களை அழித்துள்ளார்.

உங்களது ஒவ்வொரு செயலும் பிரமிப்பாக இருக்கிறது கமாண்டர். நீங்கள் நிச்சயமாக திரும்பி வருவீர்கள் ; எண்ணற்ற போர் வீரர்களுக்கு ரோல்மாடலாக இருக்கப்போகும் உங்களைப் போன்ற ஒரு வீரனை இந்தியா இழக்காது"
 

click me!