காங்கிரஸின் யூனுஸ் சவுத்ரி; பெண் முன்பே ஆபாசமாக நடந்துகொண்ட விவகாரம் - வைரலாகும் வீடியோ!

உத்தரப்பிரதேச காங்கிரஸ் மாவட்டத் தலைவர் யூனஸ் சவுத்ரியின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பாக்பத் மாவட்டத் காங்கிரஸ் தலைவர் யூனுஸ் சௌத்ரி, ஒரு இளம் பெண் முன்பாக அருவருக்கத்தக்க முறையில் நடந்துகொண்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இப்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இன்று சனிக்கிழமை அவரை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய இந்த வீடியோ, இந்திய அளவில் பரவலான சீற்றத்தைத் தூண்டியது என்றே கூறலாம். மற்றும் ஒரு அரைசியல் தலைவரின் நடத்தை குறித்து தீவிர கவலைகளையும் அந்த வீடியோ எழுப்பியுள்ளது.

அந்த வீடியோவில், காங்கிரஸ் தலைவர் சவுத்ரி தகாத நடத்தையில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. சவுதிரியின் செயலால் அந்தப் பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி, அந்த செயலை நிறுத்தும்படி கெஞ்சுகிறார் (வீடியோவில்) "தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள், அம்மா வந்துவிடுவார்கள்... இது தவறு... ஒரு நிமிஷம்... என் அம்மா வந்துவிடுவர்கள், எனக்கு பயமாக உள்ளது" என்று அந்த பெண் கூறுவதை அந்த வீடியோவில் கேட்க முடிகிறது. 

Latest Videos

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த மாநிலத் தலைவர் உடனடியாக பதவி நீக்க உத்தரவைப் பிறப்பிக்க அது தூண்டியுள்ளது. அவருடைய நீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ கடிதமும் வெளியாகியுள்ளது. 

ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறை

எவ்வாறாயினும், சவுத்ரி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும் அந்த வீடியோ, தனது போட்டியாளர்களால் திட்டமிடப்பட்ட அரசியல் சதியின் விளைவாக வந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த காட்சிகள் திரித்துக்கூறப்பட்டு, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அவரது கூற்றுக்கள் இப்படி இருந்தபோதிலும், சௌத்ரியின் வைரலான வீடியோவின் ஆதாரத்தை விசாரிக்க காவல்துறையிடம் வாய்மொழியாக மட்டுமே கோரியுள்ளார் என்றும், அதற்கான முறையான புகாரை சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மற்ற காங்கிரஸ் தலைவர்களும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து நிச்சயமற்ற ஒரு தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். நிலைமை குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் ஆனால் உள் விசாரணை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

♦️कांग्रेस अध्यक्ष ने बागपत के जिलाध्यक्ष को पद से हटाया।

♦️यूनुस चौधरी का एक कथित आपत्तिजनक वीडियो वायरल होने पर कांग्रेस अध्यक्ष ने की कार्यवाही।

♦️यूपी कांग्रेस अध्यक्ष अजय राय ने यूनुस चौधरी को अध्यक्ष पद से हटाया। pic.twitter.com/W9shXoauRx

— Satya Sangam/सत्य संगम (@SatyaSangamLKO)

ஆபாசமான வீடியோ தொடர்பான எந்த புகாரும் தங்களுக்கு இதுவரை வரவில்லை என்று உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ குறித்து எந்த தகவலும் இல்லை. புகார் அளிக்கப்பட்டால், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம்,'' என்று கூறியுள்ளார்

BJP vs Congress: மல்லிகார்ஜுன கார்கேயின் பொய்களை அம்பலப்படுத்திய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி!

click me!