பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்றும் டெல்லி போலீசார் இன்று நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக டெல்லி போலீசார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறியுள்ளனர்.
பல முன்னணி பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பான வழக்கில் பிரிஜ் பூஷன் இன்று நேரில் ஆஜர் ஆவதற்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் விலக்கு அளித்திருந்ததால், அவர் ஆஜராகவில்லை.
undefined
மணிப்பூரில் 143 நாட்களுக்குப் பின் மீண்டும் மொபைல் இன்டர்நெட் சேவை தொடக்கம்
இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், தஜிகிஸ்தானில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, டெல்லி போலீசார் வாதிட்டனர். குஜராத்தில் சோராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கைப் பற்றிக் குறிப்பிட்டு, அந்த வழக்கில் தனித்தனியாக பதிவு செய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளை ஒரே இடத்தில் நீதிமன்றம் தாக்கல் செய்யுமாறு கேட்டதாககக் கூறி, பிரிஜ் பூஷன் மீது பதிவு செய்யப்பட்ட பல்வேறு எஃப்.ஐ.ஆர். விவரங்களை நீதிமன்றத்தில் அளித்தனர்.
ஒரு பெண் மல்யுத்த வீரரின் புகாரை குறிப்பிட்டு, தஜிகிஸ்தானில் நடந்த ஒரு விளையாட்டு நிகழ்வின்போது, பிரிஜ் பூஷன் ஒரு வீராங்கனையை வலுக்கட்டாயமாக அறைக்குள் அழைத்துக் கட்டிப்பிடித்தார். அந்த வீராங்கனை எதிர்ப்பு தெரிவித்தபோது, பிரிஜ் பூஷன் சிங், ஒரு தந்தையைப்போல இதைச் செய்ததாகக் கூறியதாகவும் போலீசார் நீதிமன்றத்தில் எடுத்துக்கூறினர்.
பிரக்யான் ரோவர் நிலவில் தேசியச் சின்னத்தை தெளிவாகப் பதிவு செய்யவில்லை: இஸ்ரோ தகவல்
“தான் என்ன செய்கிறோம் என்பதை அவர் முழுமையாக அறிந்திருந்தார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது” என்று நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் பதிலளித்தாரா இல்லையா என்பது கேள்வி அல்ல, அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு புகாரை மேற்கோள் காட்டி, தஜிகிஸ்தானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது, பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது சட்டையை அனுமதியின்றி மேலே தூக்கி, தகாத முறையில் தனது வயிற்றில் தொட்டதாக மற்றொரு பெண் மல்யுத்தம் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக, பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் எம்.சி.மேரி கோம் தலைமையிலான மேற்பார்வைக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் பிரிஜ் பூஷனை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்றும் டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
ஒரே மாதத்தில் 5 மரணங்கள்... அழிவின் விளம்பில் அரிய வகை இமாலய கஸ்தூரி மான்கள்