பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்... 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..!

Published : Aug 03, 2019, 12:09 PM IST
பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்... 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..!

சுருக்கம்

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 7  நக்சலைட்டுகள் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 7  நக்சலைட்டுகள் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்தகான் பகுதியில் உள்ள சிதகோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். 

நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 7  நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!