Accident : கால்வாயில் கவிழ்ந்த வேன்.. 7 பேர் உயிரிழப்பு..கர்நாடகாவில் நடந்த கோர விபத்து

Published : Jun 26, 2022, 04:02 PM IST
Accident : கால்வாயில் கவிழ்ந்த வேன்.. 7 பேர் உயிரிழப்பு..கர்நாடகாவில் நடந்த கோர விபத்து

சுருக்கம்

Karnataka :கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே இன்று காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கால்வாயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்

இன்று காலை 12 பேர் தினசரி கூலி வேலை செய்பவர்களை குரூஸர் வேன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோகாக் தாலுக்காவில் உள்ள அக்காடங்கி கிராமத்தில் இருந்து பெல்காம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பெல்லாரி நாளா என்ற பகுதியில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மேலும் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!