செமிகான் இந்தியா 2024 : உ.பியில் முதலீடு செய்ய பாதுகாப்பான சூழல்; யோகி ஆதித்யநாத் உறுதி!

By Asianetnews Tamil StoriesFirst Published Sep 12, 2024, 11:00 AM IST
Highlights

உத்தரப்பிரதேசத்தில் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து செமிகான் இந்தியா 2024 நிகழ்வில் உலகளாவிய தலைவர்கள் ஆர்வம் காட்டினர். உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் முதலீட்டிற்கு சாதகமான சூழல் உள்ளதாக உறுதியளித்தார். 

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இண்டியா எக்ஸ்போ மார்ட்டில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2024 நிகழ்வின் துவக்க விழாவில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உலகளாவிய தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பான முதலீட்டிற்கான சூழலையும் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்வை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிட்ட முதலீட்டாளர்கள். உத்தரப் பிரதேசம் முதலீட்டிற்கு சிறந்த இடமாக  இருப்பதாகவும் தெரிவித்தனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் குறிப்பாக செமிகண்டக்டர் துறைக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாகவும், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா விரைவில் செமிகண்டக்டர் மையமாக உருவெடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Latest Videos

இந்தியாவில் செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சி

ஹன்யாங் இன்ஜினியரிங் நிறுவனத்தை சேர்ந்த தேஹூன் லீ இதுகுறித்து பேசிய போது “ எங்கள் நிறுவனம் தென் கொரியாவைச் சேர்ந்தது. இந்தியாவில் குறிப்பாக செமிகண்டக்டர் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. சமீப ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி உலகமே பாராட்டும் வகையில் உள்ளது. இங்கு மக்கள் புதிய தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்வதால், செமிகண்டக்டர் துறைக்கு இங்கு எதிர்காலம் உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் செமிகண்டக்டர் துறையின் எதிர்கால வளர்ச்சி

சிங்கப்பூரை சேர்ந்த கென் உகாவா இதுகுறித்து பேசிய போது “ இந்தியாவில் செமிகண்டக்டர் துறை இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் இந்தியா மிக விரைவில் இந்த துறையில் உலகளவில் முன்னணி இடத்தைப் பிடிக்கும். இந்தியாவில் முதல் முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன. இது மிகவும் வியக்கத்தக்கது." என்று கூறினார்.

உ.பி.யில் சட்டம்-ஒழுங்கு மேம்பாடு & அதிகரித்து வரும் முதலீடு

ஜெர்மன் நிறுவனமான விஸ்கோ டெக்கின் பிரதிநிதி ராகுல் இது குறித்து பேசிய போது “ முதலமைச்சர் யோகியின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. எங்கள் நிறுவனம் ஆண்டுதோறும் இங்கு முதலீட்டை அதிகரித்து வருகிறது.” என்று தெரிவித்தார்.

உ.பி.யில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம்

உ.பி.யில் முதலீடு செய்வது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. அரசு வழங்கும் சலுகைகள் முதலீட்டை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும். முதலமைச்சர் யோகி அளித்துள்ள உறுதியளிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது மாநிலத்தில் முதலீட்டை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!